சொத்துக்காக மைக்கல் ஜாக்சன் கொலை – தங்கை லா டோயா பரபரப்பு புகார்

maical-jak.jpgமைக்கல் ஜாக்சன் இறந்தால், நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரை கொலை செய்து விட்டனர்’ என,  ஜாக்சனின் தங்கை லா டோயா அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மைக்கல் ஜாக்சன் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அளவுக்கு அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே அவரின் திடீர் மரணத்திற்கு காரணம் என,  சமீபத்தில் வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை மைக்கல் ஜாக்சனுக்கு பரிந்துரை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். ஜாக்சனின் மரணத்தை ஒரு கொலை வழக்காக விசாரிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மைக்கல் ஜாக்சனின் சகோதரியான லா டோயா கூறியுள்ளதாவது. எனது சகோதரர் மைக்கல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருப்பதை விட மரணம் அடைந்தால் நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரைக் கொன்று விட்டனர்.

ஜாக்சனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவர் இறந்தால் கிடைக்கும் ராயல்டி மற்றும் இசை ஆல்பம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இன்சுரன்ஸ் பணத்தை கைப்பற்ற நினைத்தவர்கள் தான் இந்தக் காரியத்தை செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டதால்,  ஜாக்சன் இறந்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.

ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு நபருக்கு மட்டும் இதில் தொடர்பிருக்க வாய்ப்பு இல்லை சிலர் சேர்ந்து செய்த சதி. எல்லாம் பணத்திற்காக செய்யப்பட்டது. மைக்கேலின் இசை ஆல்பங்கள் மூலம் கணிசமான பணம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அவரை கொன்றுள்ளனர். ஜாக்சனின் மரணத்திற்கு வேறு என்ன காரணம் சொன்னாலும்,  அதை நான் நம்ப மாட்டேன். உண்மையை கண்டறியும் வரை ஓயமாட்டேன்.

ஜாக்சனை சுற்றியிருந்த மோசடி பேர் வழிகள் அவரை குடும்பத்தினருடன் சேர விடாமல் தடுத்து விட்டனர். அவர், எங்களை பார்க்க விடாமல் செய்து விட்டனர். லண்டனில் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகளை நடத்த ஜாக்சன் விரும்பவில்லை என்றாலும்,  அவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்து கடுமையாக பயிற்சி செய்ய வைத்துள்ளனர். உண்மையில் ஜாக்சன் 10 நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த விரும்பியுள்ளார்.

இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விட்டு விடவும் மைக்கல் விரும்பினார். திரைப்பட இயக்குனராக மாற நினைத்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினார். “திரில்லர்’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அதற்கான போஸ்டரை கூட அவர் வடிவமைத்து விட்டார். ஆனால்,  அவரைச் சுற்றி இருந்தவர்கள் சதி செய்து,  அவரை உலகில் துணையற்ற மனிதராக்கி விட்டனர்.

மைக்கல் எப்போதும் தன் வீட்டில் இருபது கோடி ரூபாய் அளவுக்கு பணம் வைத்திருப்பார். மரணச் செய்தி கேட்டு நான் அவரின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பணமோ அல்லது நகையோ இல்லை. நான் போகும் முன்னர் அங்கு பலர் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பணத்தை சுருட்டியுள்ளார். ஜாக்சனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் அவரை போதை மருந்துக்கு அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறு லா டோயா கூறியுள்ளார

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *