அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீற்றர் பட்டபிளை நீச்சல் போட்டியிலும் உலக சாதனை படைத்தார். இந்தியானா போல்ஸில் நடைபெற்றுவரும் அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே பெல்ப்ஸ் இந்த உலக சாதனையை படைத்தார். இதன்போது அவர் 100 மீற்றர் படர்பிளை போட்டியை 50.22 வினாடிகளில் முடித்தார்.
முன்னதாக தனது சக நாட்டு வீரரான இயன் கிரொக்கர் நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 மீற்றர் பட்டபிளை போட்டியை 50.40 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.
இதன்படி பொல்ப்ஸ் தனிநபர் பிரிவில் படைத்த உலக சாதனைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னர் அவர் 200 மீற்றர் பிரீஸ்டைல், 200 மீற்றர் பட்டபிளை, 200 மற்றுர் 400 மீற்றர் மெட்ளே நீச்சல் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார்.