வடக்கிற் கும், கிழக்கிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஓமந்தையில் பாரிய பொருளாதார மையமொன்றை அமைக்கவிருப்பதாக வர்த்தக நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.
இதற்கென கடந்த சனிக்கிழமை 20 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஏ-9 வீதிக்கும், ரயில் பாதைக்கும் அருகிலேயே இந்த நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த வர்த்தக மையம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான ஒரு கேந்திரஸ்தானமாக விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் இந்தத் திட்டத்திற்கான செலவுகள் குறித்து மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனம் அறிந்துகொள்ளும் எனவும், ரயில் பாதையைப் பயன்படுத்தி வடபகுதியின் விவசாய உற்பத்திப் பொருள்கள் தென்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.