பயங் கரவாத நடவடிக்கைகள் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த பொது மக்களுக்கான பார்வையாளர் மண்டபம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் புலிகள் பல முறைகள் தாக்கதல்களை நடத்தியதையடுத்து பொது மக்கள் பாதுகாப்புக் கருதி இந்த பார்வையாளர் மண்டபம் மூடப்பட்டது. தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு வழியனுப்ப வரும் பொது மக்கள் இந்த பார்வையாளர் மண்டபத்தை இனிமேல் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.