டெங்கு நோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார். அதே வேளை இவரது மகன் டெங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி, வெள்ளாள வீதியைச் சேர்ந்த திருமதி சாந்தினி சுவர்ணநாதன் என்ற 39 வயதுடையவரே மரண மானவராவார். சம்பவ இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிச் செயலாளர் பூ. பிர சாந்தன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன், பிரதேசசபைத் தலைவர் திருமதி கிருஷ்டிணா உட்பட உயர் மட்ட அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் விஜயம் செய்து, டெங்கு பரவும் இடங்களைப் பார்வையிட்டனர். விசேட அதிரடிப்படையினரும் சமுகமளித்திருந்தனர்.