வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக அம்மாவட்டத்தின் அரச உயரதிகாரிகளுக்கும், இராணுவ உயரதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இம்மாவட்டத்தில் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வு, புனரமைப்பு, நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவ்வதிகாரிகள் கூறினர்.