இடம்பெயர்ந்தவர்களில் 60 வீதத்தினரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விடுவிப்பு – அமெரிக்க சஞ்சிகைக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_raajapakse11.jpgயுத்த சுழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிந்ததும் இறைவனுக்கும் மும்மணிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். அது ஒரு வரம். பிரபாகரன் சுடப்பட்டார் என்பது மட்டும் தெரியும் ஆனால் எப்படி சுடப்பட்டார் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

பிரபாகரன் தற்போது இல்லை என்பதே முக்கியமானது. அவரை இங்கு அழைத்துவந்து கதைக்க விரும்பினேன். நான் ஒரு போதும் அவரைப் பார்த்ததில்லை. சந்தித்திருந்தல் ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டிருப்பேன். இதைத்தவிர வேறு எதைக் கேட்க முடியும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பான்மை கொண்ட நாடுகள் எனக் கருதவில்லை. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமக்கு உற்சாகமளித்தவர்கள். ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷை நாம் பின்பற்றினோம். அவர் விரும்பியதை நாம் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்த எங்களை அவர்கள் பாராட்ட வேண்டும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • நண்பன்
    நண்பன்

    // முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். //

    அதிபர் சொல்வது போல் நடந்தால் இருக்கும் எலிகளை பொந்துக்குள் கூட தேட முடியாது.

    Reply
  • rohan
    rohan

    அம்முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். //

    ஆனால் இது ஒரு வாக்குறுதி அல்ல என்றும் அவர் சொல்லியுள்ளார். தமிழன் நம்பிக் கெட்டான். எனினும், இன்னமும் முட்டாள் தனமாக் இன்னமும்நம்பத் தயாராகத் தான் இருக்கிறான்!

    Reply
  • மகுடி
    மகுடி

    //தமிழன் நம்பிக் கெட்டான். எனினும், இன்னமும் முட்டாள் தனமாக இன்னமும் நம்பத் தயாராகத் தான் இருக்கிறான்!//

    இதுவரைக்கும் தலைவரை நம்பி கெட்டோம். எவ்வளவு சொத்து சுகம் சொந்தங்கள்? இனி சிரி லங்கா அதிபரை நம்புவதைத் தவிர வேற கதி? எல்லாத்தையும்தான் நாத்திட்டியளே?

    Reply
  • A.Chandrakumar
    A.Chandrakumar

    கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் 180 நாட்களுக்குள் 20000 குடும்பங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய வேலைகள் நடந்துவருவதாகவும் பாதுகாப்பமைச்சின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். முல்லைத்தீவு அரச அதிபரும் கடந்தவாரம் மீள்குடியேற்றம் சம்பந்தமான வேலைகள் தனது தலைமையில் நடந்துவருவதாக அறிவித்துள்ளார். ஆகவே மீள்குடியேற்றம் நடக்கத்தான் போகின்றது.
    ஆனால் தமது தலைவரின் மரணத்தையே மாதக்கணக்கில் நம்பாதவர்கள் இதை மட்டும் நம்புவார்களா.

    Reply
  • mohan
    mohan

    //கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் 180 நாட்களுக்குள் 20000 குடும்பங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய வேலைகள் நடந்துவருவதாகவும் பாதுகாப்பமைச்சின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தமது தலைவரின் மரணத்தையே மாதக்கணக்கில் நம்பாதவர்கள் இதை மட்டும் நம்புவார்களா.//

    180நாட்கள் எப்போதிருந்து எண்ண ஆரம்பிக்கப்படும் என்று யாராவது சொல்வீர்களா?

    Reply