கிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட, 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அதனையடுத்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது