பாதுகாப்புப் படைவீரர்களின் நலன்புரி விடயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம் நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள சமாதானத்துக்கான இலங்கையர்கள் எனும் அமைப்பு 5050 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிவ் இங்லேன்ட் எனும் பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சமாதானத்துக்கான இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளான ரோஹன பெர்ணான்டோ மற்றும் சுஜீவ டி சில்வா ஆகியோர் இந்த நிதியை பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.