மிஹின்- லங்கா விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் திருச்சி நகருக்கான சேவையை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளது. வாரத்தில் நான்கு தடவைகள் திருச்சிக்கான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள மிஹின்-லங்கா விமான சேவையில் கத்தோலிக்க பக்தர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சிக்குச் செல்லும் விமானத்தில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுடன் கத்தோலிக்க மத குருக்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.