‘லண்டன் மாப்பிளை’ ஓகஸ்டில் லண்டனில் படப்பிடிப்பு.

London Mappillaiகௌதம் விஷன்ஸ் நிறுவனம் பொலிவூட் சினி புறடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ‘லண்டன் மாப்பிளை’ திரைப்படம் பாரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. 90 வீதம் படப்பிடிப்புக்கள் லண்டனிலும் மிகுதி இராமேஸ்வரம் பகுதியிலும் படமாக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதி லண்டனில் படப்பிப்புக்கள் ஆரம்பமாகும் இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாகும். லண்டன் பிரஜையான ஆர் புதியவன்  இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சித் தளங்கள் இதுவரை எந்த இந்தியத் திரைப்படங்களிலும் வராத அனுமதி பெறமுடியாத இடங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகர் சத்தியராஜின் புதல்வி திவ்யா. இது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய எஸ். ஏல். பாலாஜி முக்கிய பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவுடன் வித்தியாசமான  பாத்திரத்தில் முதல் முதல் தோன்ற இருக்கிறார் காதல் சுகுமார். இவர்களுடன் சேர்ந்து கலக்கும் இன்னொரு நட்சத்திரம் மண் படத்தில் தன் நடிப்பால் பாராட்டைப் பெற்ற விஜித்.

ஓளிப்பதிவு சி.ஜே. ராஜ்குமார். நடனம் எஸ்.எல். பாலாஜி. படத்தொகுப்பு சுரேஸ் அர்ஸ். தமிழகம் தலையசைத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் அற்புதமான ஜந்து பாடல்களுடன் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் பாலாஜி. கே. மித்திரன். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்துடன் தனது வசனங்களால் பிரமிப்பூட்ட வருகிறார் வசனகர்த்தா வசந்த் செந்தில். பாடல்களை இயக்குனர் புதியவனும் ஏக்நாத் அவர்களும் எழுதியுள்ளனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர் புதியவன்.

படப்பிடிப்புக் காலத்தில் சினிமாப் பயிற்சிப் பட்டறை ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புதியவன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அப்போது இந்தக் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட இருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • மகுடி
    மகுடி

    ஏதோ மண் படமெடுத்த டைரக்டரே? இந்த புள்ளையாரையாவது சரியா புடிங்கோ?

    Reply
  • sekaran
    sekaran

    தேசம் போன்ற ஒரு பத்திரிகைக்கு சினிமா விளம்பரம் அவசியம் தானா?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சினிமாவும் மக்களுக்கு தேவையான ஒரு பொழுது போக்குதானே? தேவையானதை தேவையான போது இணைப்பதில் தவறில்லை.

    Reply
  • sekaran
    sekaran

    ‘லண்டன் மாப்பிள்ளை’ படம் எடுப்பதில் தேசம்நெட் குழுவுக்கும் பங்கு இருக்குமோ என்கிற சந்தேகத்தில் தான் முன்னைய எனது கருத்தை எழுதினேன். நண்பனே தப்பாயிருந்தால் மன்னிக்கவும். (காரணம்: முழுத்தகவல்களும் கச்சிதமாய் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த விதம். ஆனால் பாடல்களுக்கு ஆடும் துணை நடிகர்கள் மன்னிக்கவும் நடிகைகள் பேர் விட்டுப்போயிற்றே என்று கவலைப்படுகிறேன். வழக்கமாய் மேல்நாட்டு நங்கையர்கள் தமிழ்படங்களில் ஆடுவார்கள். இதில் புரட்சி செய்திருப்பார்களோ?) பரபரப்புடன் காத்திருக்கிறேன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.ஜெயபாலன் நீங்களும் உங்கள் நண்பர் ஆர்.புதியவனும் இந்த சாக்கடையில் விழுகிறீர்களா?. எனக்கு ஒன்பது-பதினைந்து வயது இருக்கும் போது, எனது வீட்டருகில் வசித்தவர் “”காதல் கதை” திரு.வேலு.பிரபாகரன். அவ்ர் கல்வி பெற்ற கந்தசாமி நாயுடு கல்லூரி எனது வீட்டருகில். தெலுங்கு காரர்களின் கோடம்பாக்கம் எனது இரத்த நாளம். இதிலிருந்து, வெளியேற நினைத்த ஒரே நோக்கம்தான்(அனபாயன்), எனது பலவீனம்(பொருளாதார). கலைஞர் கருணாநிதியின் “மறக்கமுடியுமா” திரைப்படத்தில் வரும் “ஆபாச செய்தியை” உங்களால் மிஞ்ச முடியுமா?. இந்த ஆபாச கருப்பொருளை வைத்துதானே “கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில்” கல்லா கட்டினீர்கள்!, அதை ஏன் வெளிப்படையாக சாதாரண மக்களிடம் ஒத்துக் கொள்ள முடியவில்லை?. நாட்டைய பேரொளி பத்மினி ராஜ் கப்பூரின் “மேரா நாம் ஜோக்கர்” படத்தில்,நிர்வாணமாக நடித்தது எத்தனைப் பேருக்கு தெரியும்?.ஐரோப்பாவில் உள்ள கலாச்சாரத்தை”நெய்காரன் பட்டிக்கு” பரப்ப வேலு பிரபாகரன் சொல்லவில்லை, மாறாக இலங்கைத்தமிழர் போல் ஐரோப்பிய கலாசாரத்தை வைத்து(ஐரோப்பிய பெண்கள் தற்போது பழைய தமிழ்ப் பெண்கள் போல் ஆன்மீககரமாக சிந்திக்கிறார்கள்,ஆண்கள் பச்சிலை மருந்தையும்,பகவத் கீதையையும் நாடுகிறார்கள்),கலைஞர் கலாச்சாரத்தை வைத்து தமிழர்களை மொட்டையடிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறார்.

    ..பெரும்பாலான ஆபாசப் படங்கள் தயாரிப்பு இலங்கை இந்திய முஸ்லீம்ம்கலின்(தாவூத் இப்ரஹீம்)வசத்திலேயே உள்ளது,ஏனென்றால்,அரேபிய நாடுகளில் அதற்கு செம கிராக்கி.

    Reply
  • Vallavan
    Vallavan

    What A Joke Mr. Jeyapalan!!
    When ” Chitra Drama” Released you were the fist one to attack them. The reason put forward was “Kodampakkam Language”. Now you are the first one to advertise “London Mappillai” Re-structued in “Kodampakkam language”.Its shows that there is no policy for you. All politics and money making. Good Luck to you all!!

    Reply