மரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எகிப்திலிருந்து நாடுதிரும்பியதும் மரணதண்டனையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்
நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்ää
மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 200 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றிக்கொள்வதில் சமூக மற்றும் சட்டப்பிரச்சினைகள் உள்ளன.
மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தலாம் என்றும் கட்டுப்படுத்த முடியாது என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதில் நீதியமைச்சு கூடுதலான அக்கறை செலுத்திவருக்கின்றது.
ஜனாதிபதி எகிப்திலிருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
Kusumbo
கோட்டுக்குக் கொண்டு போகாமலே மரணதண்டனை கொடுக்கும் நாட்டில் மரணதண்டனைக்கு ஒரு சட்டமா? என்னடா இந்த கண்ணுறாவிச்சட்டம்: இதையார் மதிக்கிறாராங்கள்.