புளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று 16ம்திகதி வியாழக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதி தொடங்கி புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த வகையில் வீரமக்கள் தினம் இடம்பெறும் தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அஞ்சலிக் கூட்டங்களைத் தவிர புளொட் அமைப்பினரால் சிரமதானம், இரத்ததானம், அன்னதானம், தண்ணீர் பந்தல், நலன்புரி நடவடிக்கை என்பனவும் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 20வருட காலமாக மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தினத்தினை அனுஸ்டிப்பது மாத்திரமன்றி சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியருக்கான போட்டிப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி மாணவ மாணவியரை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றது. சுவிஸ்வாழ் புலம்பெயர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
புளொட் அமைப்பினரால் ஜூலை 13முதல் ஜூலை 16வரை அனுஸ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் காரியாலயங்களிலும், கிளைக் காரியாலயங்களிலும் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 13ம் திகதிமுதல் இன்று 16ம் திகதிவரை நடைபெற்றுள்ளது. இந்த வகையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயத்திலும் கடந்த 13ம் திகதிமுதல் 16ம் திகதியான இன்றுவரையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது.
வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான இன்றும் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு விசேட பூசை வழிபாடு இன்றுகாலை 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு புளொட் தலைமைக் காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் வீரமக்கள் தின சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது.
சாந்தன்
இண்டைகாவது யார் உமாவை போட்டுத்தள்ளினது எண்டாதல் சொல்லுங்கோ? அற்லீஸ்ற் புலியின்ர தலையில எண்டாலும் போடுங்கோ! வெத்திலை சின்னத்தில இலக்சன் கேக்கவேண்டி வந்தது கூட புலியால தான் எண்டு தோழர் சொல்லுறது மாதிரி எண்டாலும் சொல்லுங்கோ! உங்களுக்கு புண்னியமாப் போகும்!
மகுடி
சாந்தன் , பிரபா இருக்கிறாரா? செத்துட்டாரா? உண்மையாக சொல்லுங்கோ?
mutthan
இந்த விரமக்களில் யார யார அடங்குவர்:
சிவநேசனை கொன்றவர்கள், சந்ததியை கொன்றவர்கள, தீப்பொறி குழுவினரை கலைத்து கொன்றவர்கள், உரத்தநாடு முகாமில் போராளிகளை சித்திரவதை செய்து கொல்வதில் நிபுணத்துவம் பெத்தவர்கள்.
மற்றும் பெரியவரின் வியாபார அலுவலாக மாலைதீவு புரட்சியில் பங்கு கொண்டு கொல்லப்பட்டவர்கள், தலைமை தாங்கியவர்கள் இருக்கின்றார்களா.
எத்தனை போராளிகள் கொல்லப்படனர் என்ற கணக்கு தெரிந்த மொட்டை மூர்த்தியும் விழாவில் பேசினாரா.
இந்த நினைவு தினம் புலிக்கு நம்பிக்கை கொடுக்கிறது. இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களுக்கு பின்னர் முல்லைத்தீவில் தலைவருக்கும், பொட்டம்மானுக்கும் மாவீரர் நாள் கொண்டாடி மகிழ்வதற்கு.
மகுடி
நண்பர், இதயச்சந்திரன் முன்னர் சாள்ஸ் அன்ரனி என்ற மாவீரனின் பெயரை பயன்படுத்தி கல் எறிந்தீர்கள். இப்போது உங்கள் குட்டுக்கள் வெளிப்பட்டதால் பிரம்மஞானியாக பாலசிங்கத்தை போல் உங்களை உருவகப்படுத்தி பிரம்மசீடனாக்கி எழுதியது உங்கள் எழுத்துக்களில் காட்டிக்கொடுத்துவிட்டது. உங்கள் வழமையான துருப்பிடித்த கத்தியால் யாரையும் ஒன்றும் செய்துவிடமுடியாது. முதலில் உங்களின் ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்றபடி நீங்கள் எழுதிய பந்திகளை பார்க்க.
எமக்குத் தோள்கொடுத்து ……………………….
http://www.pathivu.com/news/2678/68//d,art_full.aspx
kumarathasan
in twenty years time people wont have a time to taik about this because srilanka ecnomy will change and communities will spred all over the county.there is no such a things like tamil and singala thing.all are lankankan both community can speak both language.kumaran,kumara.husain,all same.
சாந்தன்
மகுடி, /‘…சாந்தன் , பிரபா இருக்கிறாரா? செத்துட்டாரா? உண்மையாக சொல்லுங்கோ? /
அதைப்பற்றி எனக்கு என்ன கவலை. நான் சார்ந்திருந்த இயக்க தலைவனை கொலை செய்தவர் யார், ஏன் கொல செய்யப்பட்டார் என கேட்டால் என்னிடம் வந்து புலியைப்பற்றி கேக்கிறியள். நல்ல நியாயம். நீங்களும் புளொட் பிரச்சாரப் பிரிவில இருந்தனியளே?
Kumaran
Kumarathasan – all are lankankan
Atrocities and Discriminations were every where in Srilanka
Singhalese against Tamils
Tamils against Muslims
Rich against Poor
Men against Women
And so called high cast against low cast.
So identify the common enemy and work to build the better Srilanka and proud to be a Srilankan
மகுடி
சாந்தன் , நீங்கள் புளொட்டில் இருந்தால் நீங்கள் சொல்ல வேண்டியதை நீங்களே தேடிச் சொல்லுங்களேன்? எங்களுக்கு ஏன் அலுப்பு கொடுக்கிறீர்? நான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவன்.
Kusumbo
சாந்தன் நான் அறிந்தவரையில் பெரிசைப்போட்டது புளொட் என்றே அறிந்தேன். இதுவும் புளொட் சுழிபுரத்துக் தகவல். ஏன் ஏதற்கு என்று தெரியாது. புலி செய்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அன்று உமா புலிக்குப் பெரியவிடமாக இருக்கவில்லை.
சாந்தன்
மகுடி,
‘…சாந்தன் , நீங்கள் புளொட்டில் இருந்தால் நீங்கள் சொல்ல வேண்டியதை நீங்களே தேடிச் சொல்லுங்களேன்?….’’
இது நீங்கள் .
.. , பிரபா இருக்கிறாரா? செத்துட்டாரா? உண்மையாக சொல்லுங்கோ? ….
இதுவும் நீங்கள் தான்!!
’….எங்களுக்கு ஏன் அலுப்பு கொடுக்கிறீர்?…..
நான் எங்க உங்களை குறிப்பாக கேட்டேன். தெரிஞ்சவை சொல்லுங்கோ எண்டு தானே கேட்டன். நீங்களாயே உங்களுக்கு அலுப்பெண்டால் நான் என்ன செய்யிறது ? தொப்பி அளவானவையளை போடச்சொல்லி கேட்டால் நீங்கள் தொப்பி எனக்கு ரைற்றாயிருக்கு…..கடிக்குது… என்கிறியளே!!
குசும்பு…
‘…பெரிசைப்போட்டது புளொட் என்றே அறிந்தேன்…..
அப்ப அதே புளொட் அவருக்கு அஞ்சலியும் செய்யுது. என்ன வேடிக்கை? ஓ….நம்மட புளொட் தானே. எத்தின திருகு தாலங்கள் செய்தவை. இதென்ன பெரிய விசயமே?
mutthan
சாந்தன்
பெரியவரை (உமாமகேஸ்வரன் அன்புடன் அவரை பெரியவர், பெரிசு என்று அழைபார்கள்) போட்டது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது நெருக்கமாக இருந்து முறுகல் ஆரம்ப நிலையில் இருந்தவர்கள். இந்த இரண்டு பகுதியும் சேர்ந்தும் இருக்கலாம். இவரைக் கொன்றவர்கள் அல்லது சந்தேகிகப்படவர்கள் சிலரை முடித்துவிட்டார்கள். சிலர் தப்பி சுவிஸ், கனடாவில் வாழ்கின்றார்கள்.
பெரிசு சிரளிவின் உட்ச்கட்டத்தில் கொல்லப்பட்டவர். கொலை கலாச்சாரத்தின் ஒரு அவகீர்த்தி நிறைந்த தலைவர். இந்த கலாசாரத்தில் தம்பிக்கு (பிரபா, தலைவர்) ஒரு விதத்திலும் குறைந்தவர் இல்லை.
சித்தன் (சித்தார்த்தன்) இந்த கொலையுடன் தொடர்பு கொண்டவரா என்பது தெரியாது. இயல்பில் சித்தன் கொலைகளின் மத்தியில் கண்ணை முடிய பூனை மாதிரி அமைதியாக உண்மையான பெரியமனிதனை போல் இருப்பார்.
உமக்கு உண்மை தெரியவேண்டுமேன்றல் முதலில் நீர் கடவுளை நம்பவேண்டும். பின்னர் நரகத்திற்கு போக தயாராக இருக்கவேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளே நிறைவேறினால் இவர்களை நேரே கேட்டு அறியலாம். ஆனால் நரகம் இவர்களது அரசியல் என்பது எனது கருத்து