நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கம்!

nallur-kovil.jpgஎதிர் வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தன் பெருந்திருவிழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராய . யாழ். மாநகர சபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தலைமையில நடைபெற்ற கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,  ஆலயச் சுழலில் சட்டம்,  ஒழுங்கைப் பேணுவதற்காக 24 மணி நேரமும் பொலிஸார் பணியில் ஈடுபடுவார்கள். மின்சார குடி தண்ணீர் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோல் மேற்கொள்ளப்படும்.

ஆலயச் சுற்றாடலில் 13 வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். வீதித்தடைகளில் அந்தந்த வீதிகளில் குடியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தொண்டர்கள் சேவையில் ஈடுபடுவார்கள்.  துவிச்சக்கர வண்டிகளுக்கான பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் தவறுகள் இடம்பெறாத வகையில் கவனிக்கப்படும். ஆலயச் சுழலில் வாகனங்களின் நடமாட்டம் தடை செய்யப்படும

மக்களிடமிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் அவர்களுக்கான சேவையை எந்த நேரமும் வழங்கத் தயாரான நிலையில் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையும் இடம்பெறும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • kumarathasan
    kumarathasan

    nallur is many of us old days memories, i remember 3rd thiruvila or some thing……………………….. nallur every one favourite place and its 25 days was great. old good days.nallur and tamils cannot seperate.

    Reply
  • msri
    msri

    நல்லூர்க் கந்தன் யாழ் மக்களுக்கு (ஊரடங்கில் இருந்து) அருள் பாலித்துள்ளார்!

    Reply
  • Kirupa
    Kirupa

    துவிச்சக்கர வண்டிகளுக்கான பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் தவறுகள் இடம்பெறாத வகையில் கவனிக்கப்படும்”

    அட கடவுளே..
    து.ச. வண்டிக்குமா ?
    யாழ் மக்களின் ஊமை வடுக்கள் இவை,

    Reply