மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான கஷ்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே இந்த சொகுசு பஸ் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 சொகுசு பஸ் வண்டிகள் இச்சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன் காலப்போக்கில் கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்த சொகுசு பஸ் சேவையின் முதல் பயணம் அடுத்த வாரம் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
jalpani
நடந்தால் கண்டு கொள்வோம்!
Kumaran
நல்லது நடக்க வாழ்த்துக்கள்
msri
சொகுசுப் பேரூந்தைவிட> பிரயாணத்திற்கான (இராணுவ) அனுமதிப் பத்திர முறையே> பிரதான பிரச்சினையென்பதை அமைச்சர் அறியாரோ?
Kirupa
எதிர்பார்த்த ஒன்று தான்.
அவரது கூட்டதில் உள்ள சிலருக்கு வேலைக்கும் வம்புக்கும் நல்ல வாய்ப்பு.
மக்களுக்கு தேர்தல் சாதம் !!
mike
சொகுசு பஸ்வண்டிகள் தேவையில்லை. சாதரண வண்டிகள் ஓடத்தொடங்கினாலே போதுமே. அதிக கட்டணம் கொடுத்து சொகுசாக பிரயாணம் செய்வதைவிட சாதா வண்டியில் சாகாமல் பயணம் செய்வதுமேல். என்று தணியும் இந்த பயணதாகம்?
மாயா
கூத்தமைப்புக்கும் , புலிகளுக்கும் தமது மக்கள் பிரச்சனை தீர்வதில் மகிழ்வில்லை. அது நோக்கமும் இல்லை. தாம் வாழ அங்குள்ள மக்கள் அல்லல் பட வேண்டும். அதை வைத்தே தம் சுயநல அரசியலை நடத்த வேண்டும் என்பதே நோக்கம்.தமிழ் :தமிழருக்கான சகஜ வாழ்வு : தமிழருக்கான சுய உரிமை போராட்டம் : வன்னி முகாம் மக்கள் அவலம் என்பதெல்லாம் பம்மாத்து. அங்குள்ள மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். விழிக்காதவர்களும் விழித்துக் கொள்வர். விழியிழந்தோர் குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.