இலங்கை கோரியிருக்கும் 190 கோடி டொலர்கள் கடனுதவியை சர்வதேச நாணயநிதியம் வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு ஒபாமா நிருவாகம் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக நடத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தாத பட்சத்தில் இலங்கைக்கான உத்தேச 190 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனுதவிக்கு அமெரிக்கா ஆதரவை அமெரிக்க நிதியமைச்சர் அளிக்க முடியாது.
அமெரிக்க செனட் சபையினால் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kusumbo
கேட்க நல்லாத்தான் இருக்கிறது நடைமுறைக்குச் சாத்தியமா என்பதுதான் கேள்வி
msri
அமெரிக்காவின் நிபந்தனை நிறைவேற>180 அல்ல 360நாட்களே போதாது! அப்ப கடன் கிடைச்சமாதிரித்தான்!
mike
இக்கடன் தொகையை பெறுவதற்கு கில்லறி கிளின்ரனுக்கு இலங்கை அரசு ஏதாவது “சம்திங்” கொடுக்கவேண்டிவருமோ. அகதிமுகாம்கள் சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் அதைப்பார்வையிட இந்த அம்மையார் இலங்கைக்கல்லவா போகவேண்டும். அதை விடுத்து இந்தியாவில் நின்றுகொண்டு சீன் காட்டுவது-“கொடுக்க மனமில்லாதவன் பட்டியில் கொழுத்த சினை ஆடு இருக்கிறது” என்று பாசாங்கு காட்டுவது போலல்லவா இருக்கின்றது. என்றுதான் திருந்துமோ இந்த பாழாய்ப்போன அமெரிக்கா.
chandran.raja
உலகில் பெருகிப்போன வறுமைக்கும் மறுபக்கத்தில் பெருகிப்போன கோடீஸ்வர்களுக்கும் இரண்டாம் உலமாகயுத்ததிற்கு பிறகு தோற்றிவித்த உலகஒழுங்கு முறையே காரணம். உலகவங்கி நாணயப்பெறுமதியம் தமது சுரண்டலை விரிவாக்குவதற்கும் கிடைக்கக்கூடிய சந்தைகளை அழுத்திப் பிழிவதற்கும் ஏற்படுத்தப்பட்ட யுத்தங்கள் இதுவே அமெரிக்காவும் நலன்சார்ந்த நாடுகளின் கொள்கை வடிவங்கள். தேவைக்காண உற்பத்திகளைவிட ஆதாயத்திற்கான உற்பத்தியே தமது உபரிகளை தேடிக்கொள்வதற்கான நிபந்தனை ஆகின்றன. தமது பணப்பலத்தாலும் தொழில்நுட்ப அறிவாலும் ஈன்றெடுத்த பிள்ளைகளே சதாம் பின்லாடன் தலிபான் பிரபாகரன் போன்றவர்கள். மூன்றாம் உலகநாடுகளில் சமூக-சிந்தனை முளைவிடா வண்ணம் மிகவும் அவதானமாகவே இருப்பார்கள்.
இவர்கள் கண்டுபயப்படுவது தொழில்சங்களின் பரந்துபட்ட வளர்சியையே! யுத்தம் குண்டுவெடிப்பு இனவெறி மதவெறிபோராட்டம் நாட்டில் அமைதியின்மையே!! இதுவே வருவாயை அதிகரிக்கப் பண்ணுவது தங்கப்பழங்களை புடுங்கும் மரமாகவும் இருக்கக்கூடியது- இதுவே முதலாளித்துவத்தின் சட்டவடிவம் இதற்கு உட்பட்டதே இந்த நாணயபெறுமதியம். இதன் நிபந்தனைகள் புரிந்து கொள்ளக்கூடியதே!…?
Kusumbo
உப்பிடித்தான் அமெரிக்கா காட்டிய படத்தில் மயங்கி கோவணத்துடன் போய் சேர்ந்தார் அண்ணர். படங்காட்டிய அண்ணருக்கே இந்த நிலை. சும்மா விடுங்கோ தாங்கள் பெரியாளாக விடுகிறகதைதான் இது. ராஜபக்ச மடக்கிப்போடுவார் பாருங்கோ. இந்தியா தருகிறது தருகிறது என்று சீனனை வைத்தே புலிகளைப் போட்டுத்தள்ளிய ராஜபக்சவுக்கு ஹிலாரி ஒரு சின்ன விடயம். இலங்கைக்கு ஒருதடவை போய் கண்டி டிஸ்கோவுக்கும் போய்வந்தால் சரி ராஜபக்சவின் கதையைதான் ஹிலாரி கேட்கப் போறா. உந்த அரசியல் கணக்குகளை குப்பையிலை போடுங்கோ