இலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.பாகிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் வாஸ்.
இதுகுறித்து 35 வயதாகும் வாஸ் கூறுகையில், பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறைப்படி ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்.
110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸ், 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் 1994ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்தான் வாஸின் முதல் டெஸ்ட் போட்டி. 12 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2 முறை பத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
100 டெஸ்ட்களுக்கு மேல் ஆடியுள்ள 3வது இலங்கை வீரர் வாஸ். மற்ற இருவர்- முரளிதரன், ஜெயசூர்யா.