குவைத்தில் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்கள் இனிமேல் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி அமுலுக்கு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
குவைத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வன்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று புகார்கள் கிடைத்துள்ளன. எனினும் வன்செயல்களில் ஈடுபடுவர்களை இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக புதிய நடை முறை கொண்டு வரப்படுவதாக குவைத் உள்துறை அமைச்சு இலங்கை அரசுக்கு அறிவித்தது. அதனை அடுத்தே பெலிஸ் அனுமதி சான்றிதழ் கோரப்படுவதாக பணியகத் தலைவர் ரணவக்க மேலும் தெரிவித்தார்.