பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் கொல்லப்பட்டதா எம்மினத்தின் போராட்டம்? ஈழத்தமிழனுக்கு விடுதலை கிடைத்து விட்டதா? இல்லையென்றால் எங்கே உங்கள் போராட்டங்கள்? தரைப்போர், கடல்போர், வான்போர், நட்சத்திரப்போர், கெரில்லாப்போர், அறப்போர் பனிப்போர் எனப் பலபோர்கள் உலகெங்கும் நடந்தும், எமது தேசத்தில் மட்டுமே மனநோயாளியின் தனிப்போர் நடந்து மிககேவலமான முறையில் முடிவடைந்தது. மிருகத்தின் பெயரைக் காவித்திரிந்ததால் ஆறாம் அறிவு வெளியே தாவிவிட்டதா? பங்கருக்குள் இருந்து வெளியே வந்திருந்தால் இன்னொரு உலகம் இருப்பது தெரிந்திருக்கும். எதிர்காலம் அறியும் திறன், தீர்க்கதரிசனம், மக்கள்நேயம், உலகஅரசியல், பொருளாதார மாற்றங்கள் என்பன பற்றிய ஏதாவது ஒரறிவிருந்திருந்தாலாவது குறைந்தபட்ச உடன்பாட்டுடன், எம்மக்களின் அழிவைக் குறைத்து தமிழீழம் தவிர்ந்த ஏதாவதொரு அரசியல் தீர்வுடன் எம்மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான, விடுதலைக்கான அடுத்த படியில் கால்வைத்திருக்கலாம்.
எம்மக்களைக் காப்பாற்றுங்கள், போரை நிறுத்து, இனவழிப்பைச் செய்யாதே என்று ஐரோப்பிய வட அமெரிக்கத் தெருவெங்கும் கொடிகொண்டு கோசம் போட்டுத் திரிந்தோரே! உங்கள் கோரிக்கைகள் பிரபாகரன் இறந்ததுடன் நிறைவேறிவிட்டதா? நீங்கள் யாருக்காகப் போராடினீர்கள்? உங்கள் போராட்டங்கள் எல்லாம் பிரபாகரனைக் கொல்வதற்கென்றே ஆகிவிட்டதே. அறப்போர் மறப்போர் என்று உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் எனக் குறைப்போர் நடத்தினீர்கள் அறமழிந்து மக்கள் அகதியாக அவலப்படுகிறார்கள் எம்மண்ணில். எங்கே உங்கள் போராட்டம்?. மக்கள் மக்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த மாற்றுக் கருத்தாளர்களே! மாறாக் கருத்தாளர்களே! அந்த மக்களுக்கான விடிவும், தீர்வும் கிடைத்ததா? ஏன் மௌனம்? போரை நிறுத்து மக்களைக் காப்பாற்று என்றீர்களே போரைவிட கொடுமையான பசி, பட்டினி, சித்திரவதைகளையல்லவா எம்மக்கள் நாள்தோறும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருத்தெருவாய் கொடிபிடித்துக் கோசம் போட்டுப் பட்டினிப்போர் நடத்தியோரே! இன்று எம்மக்கள் பட்டினியுடன் முள்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். நீங்களோ பிரபாகரனுடன் தமிழினமே அழிந்துவிட்டது எனக் கருதி ஒரு பிணவாழ்வைத் தொடங்கிவிட்டீர்கள். போராட வேண்டிய காலம் இதுதான். நீங்கள் நடத்திய தெருப்போராட்டங்கள் பிரபாகரனையும், புலித்தலைமையையும் காப்பாற்றத்தான் நடத்தினீர்கள் என்பது வெளிச்சம் போட்டே காட்டப்பட்டுவிட்டது. உங்கள் பக்திவாதமும் பகட்டும் பொடிப்பொடியான பின்பு, எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல், மாடு செத்ததும் உண்ணி களர்வதுபோல் களன்று, பிரிந்து, சேர்த்த காசுகளைப் பங்குபோடுவதிலும், முதலீடு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து அடிபடுகிறீர்கள். உங்கள் தலைமையைக் காக்க இவ்வளவுகாலமும் தம்முயிர் உடமைகளைக் கொடுத்த தியாகச்சின்னங்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, வதைப்பட்டு சித்திரவதைக்கப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கே உங்கள் போராட்டம்? எங்கே உங்கள் மக்கள்?
வெளிநாட்டு பங்கர்களுக்குள் ஒளித்திருந்த பலர் சிறு சிறு குழுக்களாகப் புலிவழியே பணம் பறிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். புலிகளோ உடைத்த உண்டியலை பங்குபோடுவதிலும், மீண்டும் புதிதாக உண்டியல் கொண்டு திரிவதற்காக அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் மீதமிருப்பதையும் பிடுங்குவதற்காக தலைமையைப் பங்கு போடுவதிலும் அக்கறை காட்டுகிறார்கள். மாற்றுக்கருத்தாளர்கள் பலர் புலிகள் பாணியிலே வன்னிமக்களைச் சாட்டிக் கொண்டு உண்டியலுடன் திரிகிறார்கள். இப்படி முன்பு சேர்த்த பணங்கள் போய் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்ததாகத் தெரியவில்லை. இங்கே எல்லா மாற்றுக்கருத்தாளர்களையும் குறிப்பிடவில்லை. நீங்கள் எவரும் புலிகளை விடச்சிறந்தவர்கள் என்று கூறி விட முடியாது. புலியும் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நிதிதிரட்ட உண்டியலுடன் வந்தார்கள். இதன் மறுவடிவம்தான் நீங்கள் இன்று மக்களிடம் கொண்டு வரும், கொண்டுவரவிருக்கும் உண்டியல்கள். சிலமாறாற்றுக்கருத்தாளர்களின் உதவிகள் உரிய இடத்தில் போய் சேர்ந்தாலும். போகும் வழியில் தேன் எடுக்கப்போறவன் விரல் நக்காதிருப்பானா? என்ற மாதிரியாகி விடுகிறது.
கோடிக்கணக்கில் மக்கள் கொட்டிக் கொடுத்துப் போராட்டம் கோட்டை விடப்பட்ட பின் இன்று மக்களிடையே இருப்பது என்ன? வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டமுடியாது தவிக்கிறார்கள் புலம்பெயர்ந்தோர். உலகெங்கும் உள்ள அரசுசாரா நிறுவனங்களும், அரசு சார்நிறுவனங்களும் அகதிகளாய் அல்லலுறும் எம் வன்னிமக்களுக்கு உதவிசெய்யத் தயாராக உள்ளார்கள். இவர்களையும் வெளிநாட்டு ஊடகங்களையும் உள்ளே அனுப்ப என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? போராட்டங்கள் எங்கே நடத்தப்பட்டன? என்ன அழுத்தங்கள் உயர்மட்டங்களில் பிரயோகிக்கப்பட்டன? வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அந்த வன்னிமக்கள் அன்று புலிகளின் பாதுகாப்புக்குக் கேடயமாக இருந்தார்கள். இன்று அரசின் பணப்பைக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த வாய்பேசா ஜீவன்களை என்னசெய்யப் போகிறீர்கள். இவர்களுக்கான போராட்டம் எங்கே? கூட்டம்கூடி உண்டியல் கொண்டு திரிந்து யாருடைய பணப்பைகளை நிரப்ப நிற்கிறீர்கள்? தோல்வியை விட அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு முழுமையான சரணாகதியடைவதால் எம்மினத்தை நாமே எதிரியிடம் அடைவு வைக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலிகள், மாஜிப்புலிகள், பிரிந்தபுலிகள், ஆயுதம் தாங்கிய தாங்காத தமிழ் அரசியல் கட்சிகள், மாற்றுக்கருத்தாளர்களே! இன்று வன்னிமக்களுக்காக இணைந்து வெளிநாட்டு உதவிநிறுவனங்களையும் ஊடகங்களையும் வன்னிக்கு அனுப்புமாறு போராடுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள், தயங்குகிறீர்கள்?. யார் தலைமைதாங்குவது என்று பிரச்சனையா? தனிமனித பக்தியை விட்டுவிட்டு எல்லோருமே தலைமை தாங்குங்கள். இன்று நீங்கள் தனிமனிதராகவோ, குழுக்களாவோ கொண்டு திரியும் உண்டியல்கள் அரசுக்கும், அங்குள்ள ஆயுதம்தாங்கிய குழுக்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் தலையணையாகும். வெளிநாட்டு அழுத்தங்களினூடாக அவர்கள் உள்நுளையும் போதுதான் அங்குள்ள அநியாயங்கள், அஜாரகங்கள், அடக்குமுறைகள், போரின் வடுக்கள், இனவழிப்புத்தடயங்கள், பாலியற்பலாற்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்தும் வெளிவரும். ஏன் நாயணநிதியம் கொடுத்த உதவிப்பணங்கூடச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கண்காணிப்பும் இருக்கும். வெளிநாட்டு அரசுசார்ந்த சாரா நிறுவனங்கள் வன்னியில் நின்றால் மட்டுமே உதவிப்பணங்கள் சரியான முறையில் குறைந்தது 20 சதவீதமாவது வன்னிமக்களுக்குக் கிடைக்கும்.
அகதிகளை இப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பதினூடாகப் பெறும் வெளிநாட்டு உதவிகளினால் தம்குடும்பத்துப் பணப்பைகளை நிரப்பவதுடன், போர்தடையங்களை தடையங்களை மறைக்கவும், சர்வதேச நீதிமன்றின் நிற்கும் நிலையை தவிர்க்கவும், போரின் செலவுகளை சரிக்கட்டலாம் என்பதை அரசு நன்கறியும். வன்னி அகதிகளை வெளிநாடு போகவிடும் அரசு ஏன் அவர்களை தத்தமது வாழ்விடங்களுக்குப் போக அனுமதிக்கவில்லை. இதனால் இலாபம் பெறுபவர்கள் பலர். வெளிநாடு போகும் தமிழன் போனால் போனதுதான் என்பது தெரிந்ததே. வெளிநாடு போவதற்கு மற்றைய இயக்கங்கள், அரசபடைகள் அடிபட்ட அகதிகளிடமே பணத்தை வாங்கியபின் கொண்டு போய் விடுகிறார்கள் இப்பணங்களின் ஒருபகுதி இராஜபக்சவின் கூட்டுக்குப் போய்சேருகிறது. இப்பணங்கள் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சுருங்கச் சொல்லின் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதிலும், அழிவதிலும் அரச கூட்டின் பணப்பை நிரம்புவதிலும் அரசு அக்கறையாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு தலையணை எடுத்து வைத்துத் தாலாட்டுகிறது புலம்(ன்) பெயர் உண்டியல்கள்.
அமெரிக்கா வரும் என்று பிரபாகரன் இருந்தாராம், அவர்கள் ஏமாற்றி விட்டார்களாம். புதுக்கதைகள் புறப்படுகின்றன. புலிகள் அமெரிக்காவுடனும் போருக்கு நின்றவர்கள்தானே. நல்லபிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு நாசமாய் போனதுதான் முடிவு. அமெரிக்காவின் நிபந்தனைக்கு இணங்கினால்தான் நாணயநிதியத்துக் கடன் கிடைக்கும் எனப்பரப்புரை விட்ட அமெரிக்கா அடுத்த நாளே இலங்கை கேட்ட 190 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேலாக 250 கோடியாக கொடுத்துள்ளது. இதுவே அமெரிக்காவின் வழமையான நாடகம். பாலஸ்தீனருக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டு இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்காவை நம்பிய பிரபாகரனின் அரசியல் தலைமையை என்ன என்பது. மக்களை நம்பிப் போராடவக்கில்லாதவர் அமெரிக்காவை நம்பிப் போராடினாராம். இது திருநாவுக்கரசுவின் திருகுதாளமா? அமெரிக்கர்களைக் கொண்டுவந்து புலிகளுக்குக் கேடயமாக வைத்திருக்கலாமே. இறந்தவர்களுக்கும் நோபல் பரிசு கொடுக்கிறார்களாம். பிரபாகரனுக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசு முன்மொழிகிறாரே? அமெரிக்க சார்வானவர்களுக்குத்தானே அமைதிக்கான நோபல்பரிசும் கிடைக்கிறது.
குறிப்பிட்ட ஊர், சாதி, மதத்தவர்கள் தம்மவர்க்காக உண்டியலுடன் திரிகிறார்கள். முக்கியமாக சிலஊரைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டில் அதிகமாக உள்ளார்கள். அப்படியானால் மற்றக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மற்றக் கிராமத்தவர்களும் உண்டியல் கொண்டு திரியலாமே என்று கேட்பது கேட்கிறது. அதற்கு போதிய மக்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இது பிரதேசவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். பிரதேசவாதம் கொண்டு ஐரோப்பா வடஅமெரிக்காவில் பல எண்ணற்ற கொலைகள் நடந்தேறின. மதங்களினூடு உதவிகள் சேரும்போது மதமாற்றம் தலைதூக்குகிறது. மதம் என்பது இருக்கிறதோ இல்லையோ என்பதற்கு அப்பால் மனிதனின் நம்பிக்கை என்பது அவனது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறக்கக்கூடாது. ஒருவன் தான் மாக்ஸ்சிட் என்று எப்படி நம்ப உரிமை உண்டோ அதேயளவு உரிமை தான் என்ன மதத்தைத் தழுவுகிறேன் என்பதிலும் உண்டு. சாதி என்பது அடியுடன் தவிர்க்க, அழிக்கப்படவேண்டிய ஒன்று. ஆதலால் பிரிவுகள் எதுவாகவும் இருக்கட்டும் உடனடியாக அந்த பாவப்பட்ட வன்னிமக்களுக்காக புலம்பெயர் மக்களே போராட்டத்தை ஆரம்பியுங்கள். உங்களின் வரிப்பணத்திலும் தான் அரசுசார்- சாரா அமைப்புகள் இங்கு இயங்குகின்றன. இவ்வுதவிகள் எம்மக்களை அடையாவிட்டால் அது வேறு எங்கோ ஒருநாட்டில் கொடுக்கப்படும். அதை ஏன் எம்மக்கள் பெறக்கூடாது. ஒன்றாய் கூடி, இணைந்து நாம் வாழும் நாடுகளின் கதவுகளைத் தட்டுவோம். வன்னிச்சிறை உடையும். எப்போ? எப்போ??
அகதிகளைக் கருத்திற் கொண்டு அரசிடம் போனவர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி சலுகைகளைப் பெற்றுத் திரும்பி வந்துவிடுகிறார்கள். மனிதவுரிமை சாசனத்தில் (கொன்வென்சனில்) இப்படியாக அகதிகளை நடத்த முடியாது என்பது அரசுக்குத் தெரியும். ஐ.நா வுக்கும் தெரியும், ஆனால் ஐ.நா என்பது ஐக்கியமற்ற நாக்காக அல்லவா இருக்கிறது. இவ்வம்மணங்களை மறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? எம்மக்களின் மேல் பிரயோகிக்கப்படும் பலாற்காரங்களையும் சித்திரவதைகளையும் வெளிநாடுகளில் அம்பலப்படுத்தவும் உயர்மட்ட அழுத்தங்களை ஏற்படுத்துவதினூடாக இலங்கை அரசின் சித்திரவதைச் சிறைக்கூடமாக இருக்கும் வன்னி முகாங்களைத் திறப்பதற்கான போராட்டங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதைவிட்டுவிட்டு யேசு சீவிக்கிறார் என்பதுபோல் பிரபாகரன் இருக்கிறார், கே.பி புல(ன்)பெயர்ந்த தமிழ்ஈழம், அகதிகளுக்கு உதவி, கல்வி என மாற்றுக்கருத்தும் மாறாக்கருத்தும்கொண்டு உண்டியலுடன் ஓடித்திரியாது, அங்குள்ள மக்களை கருத்திற் கொண்டு பொதுப் போராட்டங்களை இங்கே ஆரம்பியுங்கள். உங்கள் உண்டியல்களால் அங்குள்ள வயிறுகள் நிறையப்போவதில்லை. இந்த உண்டியல்களால் உங்கள் உண்டிகள்தான் நிரப்பப்படுகிதோ யார் அறிவார்? வெளிநாட்டு பொது நிறுவனங்கள் உள்நுளையும் போதுதான் சிறைப்பட்ட மக்களின் நிலை, உணர்வுகள், தேவைகள் என்பன எமக்கும் என்பது எமக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும், மனிதஉரிமை அமைப்புகளுக்கும் நீதியின் கண்களுக்கும் தெரியவரும். அங்குள்ள மக்களின் தேவைகளும் தீர்க்கப்படும். எம்மக்களுக்கான போராட்டத்தை புலத்தில் இருந்தும் நாம் தொடரலாம், தொடரவேண்டும். இப்படியான போராட்டங்களை உருவாக்கி நடத்துவதனூடாக மாற்றுக்கருத்துக்களும் மாறாக்கருத்துக்களும் ஒன்றினைந்து மக்கள் கருத்தாகப் பிரணமிக்கும் வாய்ப்புகள் உண்டு. வெளிநாடுகளிலுள்ள அரசியல், பொதுநல, அரசுசார்ந்த, அரசுசாரா அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், ஐ.நா, மனிதநேய அமைப்புகள் என எல்லாக் கதவுகளையும் ஒன்று சேர்ந்து தட்டுங்கள். எம்மக்கள் சிறைப்பட்டிருக்கும் வன்னிச் சிறைக்கதவுகள் உடையட்டும். செய்வீர்களா? எப்போ? வன்னிஅகதிகள் மரணவீட்டிற்குப் பின்பா?
ஆயுதப்போராட்டம் அடக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டு, புலிகள் பிரிக்கப்பட்டு, வன்னி மக்கள் அகதிச்சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டன. வன்னிமக்களுக்காக நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்த முன்னெடுப்புக்கள் என்ன? வரிசைப்படுத்துங்கள்? அன்று புலிகளும் அதன் சகோதர அமைப்பான ரிஆர்ஓ வும் கொண்டு ஓடித்திரிந்த உண்டியல்களை சின்னதாக உருமாற்றி மற்றவர்கள் அனைவரும் கொண்டோடித் திரிகிறார்கள். ஆரம்பத்தில் புலிகளும் சின்ன உண்டியலுடன்தான் ஓடித்திரிந்தார்கள். உண்டியல் கொண்டு உங்கள் உண்டிகளை நிரப்புவதை விட்டுவிட்டு, வன்னி மக்களுக்கு போதியளவு உண்டி கொடுக்க வெளிநாட்டுதவிகளை அனுப்ப உங்கள் போராட்டங்களை முன்வையுங்கள். அமைதியாக அசந்து தூங்கும் புலமும் புலத்து அரசுசின் காதுகளும் கதவுகளும் அதிரட்டும். எமது மூன்றாம் உலகநாடுகளின் பாட்டன் பீட்டனின் பணத்திலும் உடமைகளிலும் தான் ஐரோபியர்கள் கோட்டை கட்டியவர்கள். எம்மினத்தின் அழிவுக்கு வழிகோலியவர்களில் ஐரோப்பியர்களுக்கும் பங்குண்டு. எம்பங்காளிகளை நாவறுக்கக் கேட்பதும், அவர்களின் அமைதியைக் கலைத்து துலைத்து எமது உரிமைகளை நிலைநாட்ட முயற்சிப்பதில் எந்தத்தவறும் கிடையாது. இன்னும் மாறி மாறாக்கருத்து என்றில்லாது மக்கள் கருத்துக்காக எம்கரங்களை எம்வன்னி மக்களுக்காக உயர்த்துவோமா?
Kirupa
சரி..
புலிப் போர் முடிந்து போன கதையாகவே இருக்கட்டும்.
முடிந்து வலிமை இழந்து போன அதை பற்றியெ எழுதி இன்னும் என்னும் எவ்வள்வு காலம் மாறடிக்க வேண்டும் ?.
புலி எதிர்ப்பு போதனைகள் எல்லாம் மிக்கநலம்.
மூனறாம் தரப்பினர் போலவே பேசி/ சிந்தித்து / தமிழர் என்ர அடையாளத்தை துளைத்து விடமால் இருந்தாலே புண்ணியம்.
Gee
Kirupa
இது மாரடிப்பு இல்லை..முடிந்துபோன புலிப்போரை மறக்கமுடியாமல் அல்லது விரும்பாமல் கனவுலகில் வாழும் ஆயிரமாயிரம் அப்பாவிகள் இனியும் ஏமாறாமலிருக்கவும் தமிழனைத் தமிழன் காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்திலும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையாகவே தெரிகிறது…
30 வருடங்களாக மூளைச்சலவை செய்யப்படடுள்ளவர்களைக் காப்பாற்ற இப்படியான கட்டுரைகள் மிக அவசியம்!
kumar
அனைவரும் ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என தனது கடந்த கட்டுரைகளில் வலியுறுத்திவந்த குலன் அவர்கள் இந்த கட்டுரையில் எதற்காக ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என்பதை தெளிவாக முன்வைத்துள்ளார். வெளிநாட்டு உதவி நிறுவனங்களை அனுமதிக்கும்படி போராடவேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.
அமெரிக்காவை நம்பியது புலிகளின் முட்டாள்தனம் என்று கேலி செய்யும் கட்டுரையாளர் இறுதியில் பெரும்பாலும் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க போராடவேண்டும் என்று முரணாக முன்வைக்கிறார்.
இந்த வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். இது குறித்து இதே தேசத்தில் நாவலன் அவர்களும் நிறைய எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்காக போராடவேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் கட்டுரையாளர் குலன் அவர்கள் தன்னை நன்கு இனங்காட்டியுள்ளார்.
போர் நடந்த போது இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படி செயற்பட்டன என்பதும் போர் முடிந்தபின்பு அவை எப்படி செயற்படுகின்றன என்பதும் நாம் நன்கு அறிவோம். மேலும் பல நாடுகளில் இந்த வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் எப்படி செயற்பட்டன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தும் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு மீண்டும் இந்த வெளிநாட்டு உதவி நிறுவனங்களை அனுமதிக்கும்படி போராட ஏன் கட்டுரையாளர் அழைக்கிறார்? ஒருவேளை இதில் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதும் லாபம் இருக்கிறதோ என சந்தேகம் ஏற்படுவது தவிர்க்கமுடியாமல் உள்ளது.
வெளிநாட்டு உதவி நிறுவனங்களை அனுமதிக்க அனைவரும் ஜக்கியப்பட்டு போராட வேண்டும் என அழைப்பு விடும் ஒரே கட்டுரையாளர் குலன் அவர்கள் மட்டுமே என்ற பெருமையைத்தவிர வேறு எந்த பயனும் அற்ற கட்டுரை இது.
sutha
1972ம் ஆண்டு ஜே.வி.பி யின் பேரால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் 1989ம் ஆண்டு அறபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதே ஜே.வி.பி யின் பேரால் கொல்லப்பட்டனர். அப்போது அவர்கள் ஒப்பாரி வைக்கவில்லை. உலக உதவி நிறுவனங்கள வரவேண்டும் என அழைக்கவில்லை. இவ் நிறுவனங்களும் இந்த மனிதப்படுகொலைகள் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. இருப்பினும் அந்த மக்கள் மனம் தளரவில்லை. தமது தலைமையை பறி கொடுத்த அந்த ஜே.வி.பி இயக்கம் இன்று மீண்டும் பெரிய இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலதான் ஒப்பாரிகளும் புலம்பல்களும் ஓங்கி ஒலிக்கின்றன மக்களின் பேரால்.
தமிழீழம் என்ற தனிநாட்டுக்காகவோ அல்லது வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாணத் தீர்வுக்காகவோ இதுவரை போராடி வந்த ஒரு இனத்தை இப்போது உலக உதவி நிறுவனங்களை அனுமதிக்கும்படி போராடும்படி கேட்கின்றனர். அதையும் மக்கள் பேரால். இதற்காகவா மக்கள் இவ்வளவு காலமும் போராடினார்கள்? இவ்வளவு இழப்புகளையும் சந்தித்தது இந்த கோரிக்கையை முன்வைக்கவா?
போராட்டம் என்றால் இழப்பு ஏற்படத்தான் செய்யும். இழப்பின்றி புரட்சி எப்படி சாத்தியமாகும்? ………………. .நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க விரும்புகிறோம். எதிர்கால சந்ததிக்கு ஓர் உன்னதமான நிலை உருவாக்க விரும்புகிறோம்.
இழப்புக்கு தயார் அற்ற அடிமை விசுவாசிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். தங்கள் சுயநலத்திற்காக எதிரிக்கு சோரம் போவார்கள். இது வரலாறு முழுவதும் நாம் காணுவது. எனவே இது எமக்கு ஆச்சரியம் அல்ல. மாறாக மேலும் மேலும் எம்மை உறுதி கொள்ள வைக்கின்றது.
அன்று அரசுடன் சேர்ந்து பிச்சை எடுத்து அபிவிருத்தி காணமுடியும் என்று துரையப்பா செல்லையா குமாரசுரியர் போன்றவர்கள் செயற்பட்டபோது அவர்களை துரோகிகள் என்று சுட்டுக்கொன்றவர்கள் இன்று அவர்களின் பாணியில் அரசுடன் சேர்ந்து அபிவிருத்தி என்று கூறுகின்றனர். அன்று அபிவிருத்தி அல்ல சுதந்திரம் என்று முழங்கியவர்கள் இன்று போராட்டம் வேண்டாம் அபிவிருத்தி வேண்டும் என்று முழங்குகின்றனர்.
தங்களின் சுயநலத்திற்காக மக்களை முட்டாளாக்கும் இவர்களின் நோக்கம் வெற்றிபெறப்போவதில்லை. மக்கள் விடுதலை பெறவேண்டி செய்யும் போராட்டத்தை இவர்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இறுதி வெற்றி உறுதி மக்களுக்கு.
மாத்தையா
// எம்மக்கள் சிறைப்பட்டிருக்கும் வன்னிச் சிறைக்கதவுகள் உடையட்டும். செய்வீர்களா? எப்போ? வன்னிஅகதிகள் மரணவீட்டிற்குப் பின்பா?//
நடக்கும் மரணங்களை எவராலும் தடுக்க முடியாது. நடக்கும் கைதுகளை எவராலும் தடுக்க முடியாது. நீங்கள் கூறும் அதே உதவி நிறுவனங்கள்தான் புலிகளின் பலம் – பலவீனம் தொடர்பான தகவல்களை அரசுக்கும் உலகுக்கும் தெரிவித்தன.
புலத்து புலிகளும் , புலத்து புலி ஆதரவாளர்களும் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதிலேயேயும் , யாரை நம்புவது என்பதிலேயும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலி பண முடிச்சவிழ்கிறவர்கள் , எந்த விதத்தில் பணம் பறிக்கலாம் என்று திட்டம் போடுவதில் மண்டையை உடைக்கின்றனர்.
முகாம்களில் மக்கள் இருந்தால்தான் , அதையாவது வைத்து புலத்தில் காசு பறிக்கலாம். அதையும் குலன் கெடுக்கவா பார்க்கிறீங்க? இவர்கள் போராட்டமாக வீதிக்கு இறங்கினால் , உலகம் இன்னம் பல மில்லியன்களை கொடுத்து மக்களை குடியமர்த்த அழுத்தம் கொடுக்கும்.
அதன் பிறகு, புலத்து புலிகள் எதை வைத்து அரசியல் நடத்துவது?
புலிகளில் இருந்த நீங்களே, புலிகள் குணம் புரியாது கட்டுரை எழுதுறீங்களே?
இதை விட சிங்கள பத்திரிகைளில் , வவுனியாவில் கப்பம் கேட்கும் இயக்கங்களாக PLOTE, EPDP, EROS இருப்பதாக எழுதியுள்ளன. இவர்களுக்கு கப்பம் கொடுக்காதவிடத்து கொல்லப்படலாம் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. பொது மக்கள் இன்னும் பீதியுடனே இருக்கின்றனர். அது அரச படைகளை விட நமது தமிழ் படைகள் காரணமாகவே என்ற உண்மையை கீழ் வரும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.lankaenews.com/Sinhala/news.php?id=9826
தவிரவும் EPDP – பிள்ளையான் அணி – மற்றும் கருணா அணியினர் முகாம்களில் இருக்கும் புலிகளில் பயிற்சி பெற்ற இளையோரை அழைத்துச் சென்று தமது பாதுகாப்பு படையில் வைத்துக் கொள்வதாகவும் , அதற்கு பிரதி உபகாரமாக அவர்களது பெற்றோரை முகாமை விட்டு விடுவித்து உதவுவதாகவும் சிறுவர்களுக்கான வெளிநாட்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பல்லி
குலன் கட்டுரையின் தலைப்பு புலி எதிர்பாக இருந்தாலும் கட்டுரை மிக அருமை; எப்போது நாம் அமைப்பு வேறுபாடின்றி மக்கள் பற்றி சிந்திக்கிறோமோ அல்லது பேசுகிறோமோ அன்றுதான் எமது மக்கள் பிரச்சனை பற்றி பேச தொடங்கிறோம் எனலாம்; ஆக அந்த ஆரம்பநிலைக்கு வர பலரயோ அல்லது சிலரையாவது வர வைக்க உங்கள் கட்டுரை தூண்டும் என்பது பல்லியின் கருத்து; விட்டு கொடுப்பு என்னும் மருந்தை நாம் சாப்பிட்டால் தமிழர் பிரச்சனை என்னும் வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம்;
மகுடி
பிரித்தானியத் தமிழர் பேரவை உருத்திரகுமாருக்கு எழுதியுள்ள மடல் ஒன்று 31-07-2009
திரு வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கு,
தங்களது கடிதங்களிற்கும் தொடர்பாடல்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள். பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கும் தங்களது பிரித்தானிய பிரதிநிதிகளுக்குமிடையில் 27, யூலை அன்று நடைபெற்ற கூட்டத்தின்போது இவ்விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.சனநாயகப் பண்புகளைக்கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய, அகிம்சாவழியில் உருவாகின்ற,அடிப்படை அரசியல் தளத்திலிருந்து சகலரினதும் பங்குபற்றுதலுடன் கூடிய மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டமைப்பு, எனும் உயரிய பண்புகளுடைய நாடுகடந்த அரசு எண்ணக்கரு குறித்து நீங்கள் அளித்த பதில்களும் அறிக்கைகளும் பிரித்தானிய தமிழர் பேரவையினை உற்சாகப்படுத்துகின்றது.
எமக்கிடையேயுள்ள ஒரே இலக்கும் ஒத்த கொள்கைகளும் , பொது வேலைத்திட்டமும் எம்மை மேலும் உற்சாகப்படுத்துகின்றது. குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினைப் பொறுத்தவரையில் நாடுகடந்த அரசு என்ற எண்ணக்கருவானது, இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக தாயக கோட்பாட்டினை அங்கீகரிப்பதோடு, அத்தாயகபூமியில் இறையாண்மையுடைய தமிழீழத் தனியரசை அமைவதே தமிழர்களின் அபிலாசை என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையானது பிரித்தானியா வாழ் பெரும்பாலான தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் சுயாதீன அமைப்பு எனும் நிலையில் இருந்து, ஒரே பொதுவான இலக்கு,அடிப்படை விழுமியங்கள் கொள்கை எனும் அடிப்படையில் நாடு கடந்த அரசு எனும் எண்ணக்கருவிற்கு தனது ஆதரவினை வழங்குகின்றது. அத்தோடு இம்முயற்சி உலகலாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் என நம்புகின்றோம்.பிரித்தானிய தமிழர் பேரவையானது தனது கட்டமைப்பிலும் மூலோபாயத்திலும் பல அடிப்படை மாற்றங்களை செய்துவரும் இத்தருணத்தில் நாடுகடந்த அரசு எனும் எண்ணக்கருவிற்கு செயல் வடிவம் கொடுப்பதிலும் அதன் கட்டமைப்பிற்கு வடிவம் கொடுப்பதிலும் தன்னை ஈடுபடுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளது. தங்களது முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களோடு இணைந்து செயலாற்ற ஆவலாக உள்ளோம்.
தங்கள் உண்மையுள்ள
நா சுகந்தகுமார்
(இடைக்கால நிறைவேற்றுக்குழு சார்பாக)
பிரித்தானிய தமிழர் பேரவை.
இவர்களது தாகம் மக்களைப் பற்றி ஏதாவது உள்ளதா? இவர்களது இருப்பு என்பதை உணர முடியுதே?
மாயா
Tamil parties in IDP racket (பணம் வாங்கி மக்களை வெளியேற்றும் தமிழ் குழுக்கள்)
(Lanka-e-News 02.Aug.2009 1.15PM) The Inspector General of Police (IGP) has alerted police chiefs in Vavuniya about a racket involving smuggling out IDPs from camps by operatives of several Tamil political parties. In a confidential report sent to the DIG, Vavuniya, the IGP has implicated activists of Tamil political parties who laid down arms to join mainstream politics with smuggling civilians for exorbitant fees. The claim was confirmed by Vavuniya District TNA MP, S Kishor, who said he was aware that around 50,000 IDPs have escaped from welfare camps by paying money to these groups. He also said that President Mahinda Rajapaksa has been informed of the situation.
Sources revealed that amounts ranging from Rs.100, 000 to 10, 00000 have been paid to these groups by the Tamil IDPs for smuggling them out from welfare camps. In addition, Tamil political parties enlist these IDPs as new members and bring them out of the welfare camps, sources said.
DIG in charge of the Northern Province Nimal Lewke said “We are not still sure about the exact number of IDPs who escaped from the camps. Arrangements are being made to carry out a census on IDPs to check the figures”.
The DIG said the lists of those who have passed away in camps and those who were released must be compared with documents at the Divisional Secretariat and then the number of those who have escaped can be identified”.
Meanwhile, Defence Secretary Gotabhaya Rajapaksa Saturday said though the LTTE had been military crushed once and for all, attempts were being made to rescue hardcore terrorists taking refuge among civilians accommodated in welfare centres in the Vavuniya region.
He warned that this could be a part of an overall strategy to explore ways and means of reviving the organisation.
In an interview he said an organised campaign had been launched to free terrorists from welfare camps before army and police investigators now engaged in a systematic screening process closed in on them.
Ordinary civilians would never make an attempt to flee welfare centres as the government, with the support of some international agencies, had provided adequate facilities for them, Rajapaksa pointed out.
Newly appointed Commissioner General of Rehabilitation, Major General Daya Ratnayake, last week said that though close to 10,000 LTTE cadres, both men and women, had been detained at 12 detention camps exclusively set up for ex-combatants, up to 10,000 more, including hardcore cadres could still be hiding among the civilians accommodated separately.
He said that once the screening process come to an end, the total of terrorists in government custody could go up to 15,000 or perhaps as high as 20,000.
The Defence Secretary said a many persons had escaped over the past two months though some were again re-taken to government custody. He acknowledged that some of those who escaped had been assisted by a few police and army personnel deployed in the area.
Some had escaped after being admitted to Vavuniya hospital on the pretext of illness. Action was being taken to tighten security measures in the area he said, revealing that a clergyman too, had been involved in the human smuggling racket.
Fielding questions, he said that the government could find itself in a difficult situation if it failed to account for people accommodated at welfare centres with the knowledge of the ICRC. Those who demand freedom of movement IDPs would then make accusations about disappearances. Some who escaped had fled the country while many taken refuge in Colombo and plantations areas.
He said that interested parties would turn IDPs to a major issue as part of their overall strategy to undermine Sri Lanka. Some wanted the government to enhance facilities available to IDPs while these same people speculate that permanent structure in the camps would mean civilians would be held for two to three years.
Despite severe financial difficulties, the government had always provided maximum possible support to IDPs. He vowed that the government wouldn’t allow anyone to reverse military victories achieved at a huge cost of lives and limbs of the armed forces.
– South Asian Media Net
Kulan
ஜி! உண்மையில் கட்டுரையின் தார்ப்பரியத்தை நன்கு புரிந்துள்ளீர்கள். நன்றிகள். மேலும் பிரபாரனையும் புலிகளையும் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் ஊர்வலங்கள்> கோசங்கள்> உண்ணாவிரதங்கள்> கூட்டங்கள்>கோரிக்கைகள்> பேரணிகள் பதாகைகள் இன்னும் இன்னும் செய்தார்கள். இன்று வன்னிமக்கள் அடைபட்டு> திறந்தவெளி இருள் சிறைக்கூடத்தினுள் இருக்கிறார்கள். இவர்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடந்தன? மக்களை காப்பாற்று என்று அன்று கத்தியவர்கள் எல்லாம் எங்கே? இதில் இருந்து புரியவில்லையா அன்று கத்தியது எல்லாம் புலிகளைக் காப்பாற்ற மட்டுமேயன்றி மக்களைக் காப்பாற்றவுமல்ல மக்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதே ஜதார்த்தம்.
பார்த்திபன்
பிரித்தானியத் தமிழர் பேரவைக்குள்ளேயே இப்போது குழப்பம் நடக்கின்றது. ஒரு அமைப்புப் சார்பாக தலைவரோ செயலாளரோ அல்லது இருவரும் இணைந்தே அறிக்கை விடுவார்கள். இங்கே இடைக்கால நிறைவேற்றுக்குழு சார்பாக ஒருவர் அறிக்கை விடுகின்றார் என்றால் அந்த அமைப்பின் நிலையை உணர முடிகின்றது. பொதுவாகவே பிரித்தானியத் தமிழர் பேரவையும் மக்களை முட்டாள்களாக்கி தெருவில் இறக்கி கூத்தடிக்க வைத்ததில் பெரும் பங்கு வகித்தது. இப்போ மீண்டும் மக்களை தொடர்ந்து இரட்டிப்பு முட்டாள்களாக்க உருத்திரகுமாருடன் கைகோர்க்க நினைக்கிறது போலும்.
Kulan
கிருபா! நீங்கள் சொன்னீர்கள் தமிழர் என்ற அடையாளத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும் என்று. எது தமிழர்களின் அடையாளம்? இவ்வளவு காலமும் கொடிகளில் இருந்து பேரணிவரை இருந்தது புலியடையாளமே தவிர எங்கு தமிழ் அடையாளம் இருந்து. தமிழ் என்ற பெயரில் புலிகள் சவாரி செய்தார்களே தவிர தமிழை வாழவைக்க என்ன நடந்தது. ஏன் இந்தியாதான் என்ன செய்தது. திரும்பிப் பாருங்கள் தொலைக்காட்சியைத் திருப்புங்கள் இந்தியத் தமிழர்களின் வெள்ளைக்காரனுக்குத்தான் (ஆங்கிலேயனுக்கு)பிறந்தார்களே இன்றி ஆங்கிலேயருக்குத்தான் நிகழ்சிகள் செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நல்ல தமிழ்பாடல் போட்டியில் நடுவர்கள் பேசுவது முழுக்க அல்லது 80வீதம் ஆங்கிலம். ஜிரிவி ல் ஒரு விளம்பரம் ஆகா மீனுக்கு கண் இதையம் ஸ்கின் கெட் க்கு சிறந்தது ஆகா மீன். தோலுக்கும் தலைக்கும் தமிழ் தெரியாமல் நாசிகளின் ஸ்கின்கெட்டை அழைக்கிறார்கள் ஆகாமீனுக்கு. ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். தமிழ் இருக்கும் வரைதான் தமிழன். தமிழே தமிழனின் பாதுகாப்பு. இதை இயன்றவரை நான் செய்தேன் செய்கிறேன். நான் அலுவலகங்களில் தமிழில்தான் கையொப்பம் இடுவது வழக்கம். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்துள்ளேன். கையொப்பம் என்பதும் அடையாளம் தான் அது எந்த மொழியிலும் இருக்கலாம். தமிழ்தான் தமிழனின் பாதுகாப்பு. இதை இலகுவாக்குவதற்கு மொழிவல்லுணர்கள் முன்வரவேண்டும்
Kulan
குமார்! தங்களது என்னைப்பற்றி எடுகோள் முற்றிலும் தவறானது. இக்கட்டுரையில் மட்டுமல்ல பலவேறு கட்டுரைகளிலும் நான் தொடர்ந்து குறிப்பிடுவது ஐக்கியம் ஐக்கியமான போராட்டம். போராடவேண்டிய காலம் இப்பதான். புலிகள் அஜாரகம் முடிந்துவிட்டது. மக்களைச் சாட்டி தம்மை வளர்த்தவர்களும் தமக்கு முகவரி தேடியவர்களையும்தான் பார்க்கிறேன். மக்களைக் கொல்லாதே என்று கொடிபிடித்துக் கோசம் போட்டவர்கள் எல்லாம் அதேமக்கள் அடைக்கப்பட்டு சிறைப்படுத்துப்பட்டு இருக்கும் இவ்வேளையில் எங்கு போனார்கள்? இதுவே என்கட்டுரையின் ஆதங்கம்:
வெளிநாட்டு நிறுவனங்களை அனுப்புவது என்பது ஒரு உதாரணமே தவிர அதுவே ஒரு போராட்டமாகாது. நாங்கள் சொல்வது போல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் எல்லா உதவிநிறுவனங்களும் இருக்கிறது என்பது முழுத்தவறானதே. நான் தனிமனிதனாக 3 உதவிநிறுவனங்களுடன் பேசியபின்னே இதை எழுதினேன் அவர்களிடம் இருந்து வந்த பதில் ஒரேமாதிரியாவே இருந்தது. உதவிநிறுவனங்களால் வன்னிமக்கள் அனைவரும் பயன்பெறுவார்களோ இல்லையோ ஆனால் மற்றநாட்டவர்களின் பார்வையில் எம்மக்கள் இருப்பார்கள் என்பதை மறுக்க முடியுமா? மாறும் மாறாக்கருத்தாளர்களின் உண்டியல்களால்தான் வன்னிமக்கள் வயிறு நிரம்பும் என்கிறீர்களா? புலிகளுக்கு எதிராக என்றும் அமெரிக்கா இருந்தது என்பதற்காக சாதாரண மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அறிந்த உதவி நிறுவனங்கள் அமெரிக்கா சாந்ததாக இருந்திருக்கலாம். அரசுசார நிறுவனங்கள் நிச்சயமாக ஐரோப்பா வட அமெரிக்கா சார்ந்து இருக்கத்தேவையில்லை. ஆசியா> தென்னமெரிக்காவாகக் கூட இருக்கலாமே.
என்கட்டுரையின் முழுநோக்கம் இன்றுதான் நாம் வேற்றுமைகளை மறந்து எம்மக்கள் எனும் தளத்தில் இணைந்து கைபோர்த்து போராடக் காலம் வழிவிட்டிருக்கிறது. மேலும் வெளியுலகம் உள்நுளைந்தால் மட்டுமே சர்வதேச சட்டமீறல்களை வெளிக்கொணர முடியும். இதுவும் போராட்டம் தான். சரி சர்வதேசம் உள்நுளைய முடியாது> கொழும்பிலுள்ளவர்களுக்கு எமக்குத் தெரியவரும் செய்திகள் கூடத் தெரியாமல் வைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவத்திலுள்ள தன்பிள்ளை உயிருடனா இல்லையா என்பது கூடப் பல சிங்களத் தாய்மாருக்குத் தெரியாத நிலை. ஒரு இருட்டுச் சிறைக்குள் எம்வன்னிமக்கள் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். ஏன் உங்களால் கூட அங்குள்ள மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிகிறதா? போக முடியுமா? இக்கட்டுரையின் முழுநோக்கமே ஐக்கியமாக இணைந்த கரங்களுடன் நாம் போராடும் போதுதான் அங்குள்ள மூடப்பட்ட சிறை உடையும். இப்படி ஒரு பொது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதனூடாக மட்டுமே தான் பிரிந்து உடைந்து நொந்து நெகிண்டு போயிருக்கம் நாம் ஒரு குறிநோக்கி இணையமுடியும் என்பதுதான் என்கட்டுரையின் ஆதங்கம். இப்படி இணைவதே எமது மக்களை ஈழத்தில் கெளரவமான பிரஜைகளா பிரகணப்படுத்தவும் உறுதியுள்ள கரங்களாக அவர்களை நோக்கி நீட்டவும் முடியும் என்பதே.
உங்களது பின்நோட்டத்தில் உள்ள மிகவேதனை தரும் விடயம் என்ன வென்றால் எனக்கு இதில் இலாபம் இதுக்கிறதா என்று வினாவியதே. எனக்கு எந்த இலாபமும் இதில் இல்லை. இழப்புத்தான் அதிகம். இக்கட்டுரையை எழுதும் நேரம் பின்நோட்டத்துக்குப் பதிலளிக்கும் நேரம். அதுமட்டுமல்ல நான் ஒவ்வோரு வருடம் எனது சம்பளத்தில் 2வீதத்தை தனிமனிதனாக கிழக்கிற்குச் செய்தவன். எனக்கு இழப்புமட்டும்தான் இலாபம் என்பது இல்லை. அப்படி இயற்கைக்கு ஒரு சக்தியிருந்தால் அந்த இலாபத்தை புண்ணியம் என்று சொல்லலாமா என்று யோசிக்கிறேன். அதை எதிர்பார்த்துக் கூட நான் எதையும் செய்யவில்லையே. நான் இதுவரை கொடுத்தது திரும்பி வந்தாலே போதும் நான் கோடீஸ்வரனையா குமார்!!
thurai
இதே போன்ற கட்டுரைகள் மேலும் வெளிவர வேண்டும். கடந்த 30 வருட போராட்டம் முடிந்த கதையல்ல. ஈழத்தமிழரின் வரலாற்ரில் மறக்க முடியாத துயரச் சரித்திரம். இதனை இளம் சந்ததியினர் நன்கு பரிசீலிக்க வேண்டும். இதில் நடந்த தவறுகளையும் பொறுப்பானவர்ளையும் உலகத் தமிழர் முன் கொண்டுவர வேண்டும்.
இந்த முக்கியமான விடயங்களை விடுத்து விட்டு, புலத்திலிருந்து ஈழவிடுதலை காண முயல்வது, சில்லுகள் களட்டப்பட்டுள்ள பஸ்சில் ஏறி பயணம் செய்ய முயல்வது போலாகும். ஆண்டாண்டு காலமும் அதே இடத்தில்தான் நிற்பார்கள்.
விடுதலை உருமை என்பது எங்கு வேண்டுமோ அங்கே தான் குரல்கள் எழுப்பப்பட வேண்டும். வடக்கிலும்,கிழக்கிலும் வாழ்ந்த தமிழர்களால் தாழ்த்தப்பட்டவர்களோ அன்றி தென்னிலங்கையில் சிஙகளவருடன் சேர்ந்து வாழும் தமிழர்களோ விடுதலைக்கும், தனிநாட்டிற்கும் புறப்படவில்லை.
ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை தமிழரை ஆழ நினைப்பதில் என்ன குறை என்றவர்களே தொடக்கியவர்கள். அவர்களே புலத்திலும் தங்களின் அடையாளங்கள் அழிந்து போவதிலிருந்து காப்பாற்ரவே கடல் கடந்த போராட்டங்களை நடத்துகின்றார்கள்.
துரை
Kulan
சுதா! நீங்கள் ஜேவிபி பற்றிக் கூறியது உண்மைதான். ஆனால் அதன்பின் ஜேவிபி யைப் பார்க்கிறீர்கள் தானே. மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. காலங்காலமாக நடந்த சாதிச் சேவகம் பின் வெள்ளைத் தோல்களுக்கான சேவகம் பின் புலிச்சேவகம் என்று சேவகம் செய்தே மூளை செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியடைய வேண்டுமானால் நாம் எம்மக்களின் நலனுக்காக எப்படிப் போராடலாம் என்பதையே ஆராய்வதற்கு ஆரப்பப்புள்ளி ஒன்று தேவைப்படுகிறது அல்லவா. அதுதான் நான் கூறும் போராட்டம். இங்கே பலர் சின்னச் சின்னக்குழுக்களாய் கூடி வன்னிமக்களுக்காக உண்டியல் கொண்டு திரிகிறார்கள். புலிவழியே அவர்கள் பணி தொடர்கிறது. இக்கட்டுரை அதற்குமான ஒரு எச்சரிக்கைக் கட்டுரையே.
மாத்தையா! உண்மையா என்கட்டுரையை சரியாக வாசித்து உணர்ந்திருக்கிறீர்கள்.
//முகாம்களில் மக்கள் இருந்தால்தான், அதையாவது வைத்து புலத்தில் காசு பறிக்கலாம். அதையும் குலன் கெடுக்கவா பார்க்கிறீங்க? இவர்கள் போராட்டமாக வீதிக்கு இறங்கினால் //
தூர இருந்து புலிப்படம் பார்த்து கொட்டிக் கொடுப்பதைவிட கிட்டவிருந்து பார்த்தவனுக்குத்தானே அதிகம் தெரியும். வயதுவோனாலும் வருவது தூரப்பார்வைதானே
மாயா
தமிழில் கையெழுத்திடுவதாலோ , தமிழ் தமிழ் என்று கோஸம் போடுவதாலோ அல்லது கொடி தூக்குவதாலோ தமிழும் வாழாது. தமிழனும் வாழ மாட்டடான்.
ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்களில் இருந்தே அவனை யாரென்று மற்றவர்கள் தேடுவார்கள். அப்போது அவன் தன்னை மட்டுமல்ல , தன் இனத்தையும் , மொழியையும் வாழ வைப்பான்.
ஆயுர்வேதமும் , யோக பயிற்சிகளும் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே. அது செய்யும் நன்மைகளால்தான். அந்த நன்மை அது பிறந்த நாட்டை மகிமைப்படுத்துகிறது. நம் தமிழர்கள் யுத்தத்தைகக் கூட உருப்படியாக செய்யாதவர்கள்.
அரைப் பக்கிரி காந்தியை கூட உலகம் மதிப்பதற்கு காரணம் அவர் மனிதம் வாழ அகிம்சை வழி காட்டலை செய்தமையால்தான். மகாத்மா என்றாலே அது காந்தி என்றே நினைக்கின்றனர். இதுவரை நம்மில் ஒருவராவது மனதில் நிலைத்தவர்கள் இருக்கிறார்களா?
எல்லோரும் தமது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்களாகவே இருப்பதால் , எவரையும் பெரிதாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவோர் மட்டும் ஏதோ நினைவு நாட்களை கொண்டாடுகிறார்கள். சிலலருக்கு உயிரோடு இருக்கும் போது இருந்த மதிப்பு மரணித்த போது இல்லாமலே போனது. அந்த அளவு சுயநலம் கொண்டவர்ககள் நம்மவர்கள்.
Kulan
பல்லி! நன்றி: நிதானமான அறிவு பூர்வமான பின்நோட்டம். உங்களிடன் எம்மக்கள் பற்றி ஆளமான உணர்வையும் தூரநோக்கையும் பாராட்டுகிறேன். கருத்தையும் பற்றி நான் பலருடன் கதைத்திருக்கிறேன். நான் ஒரு பல்லியின் பின்னோட்ட இரசிகன்.
தயவுசெய்து மகுடியின் பின்நோட்டத்தை வாசியுங்கள் என்கட்டுரையின் சாராம்சம் புரியும். எமது மக்களுக்கு ஒரு கெளரவமான ஒரு அரசியல் தீர்வு வேணும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்று இவர்கள் புலிகளால் அல்லுற்ற அல்லலுறும் மக்களுக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள். உடைத்த உண்டியலை யாருக்காகச சேர்த்தீர்களோ அவர்களுக்குக் கொடுப்பீர்களா?
பார்த்தீர்களா பார்த்தீபன் கூறியதை. சரியான முறையில் இனங்கட்டு பொதுவேலைத்திட்டங்களை உருவாக்கி அதானூடாக இணைவுகளை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிக்கை விடுவதே போராட்டமாகி விட்டது.
துரை சொல்வதுபோல் எம்மக்களின் குரலுக்கு நான் பலம் சேர்ப்பதாக எம்புலத்துப் போராட்டம் அமையவேண்டுமே தவிர நான் இங்கெடுக்கும் முடிவுகளை நாம் எம்மக்களுக்குத் திணிப்பதாகவே அமையும் கடல் கடந்த தமிழ்ஈழம். அது கடந்த தமிழ்ஈழம்தான்.
Kulan
மாயா! ஒரு சிலவிடயத்தில் முரண்படுவற்கு மன்னிக்கவும். சின்னச்சின்ன நீர் துளிகள் தான் வெள்ளமாகிறது. நாம் செய்யும் சின்னச்சின்னப் போராட்டங்கள் எம்மொழிக்கும் இனத்துக்கும் வலுவூட்டும். தமிழில் கையெழுத்துப் போடுவதால் தமிழ்வாழ்ந்துவிடாது என்றீர்கள். கையெழுத்து ஏன் எதற்கு என்னத்தைக் குறிக்கிறது. நாம் கையொப்பம் இடும்போது எமது பெயர் பதவி பட்டம் எல்லாம் கீழே இருக்கிறது. எதற்குக் கையெழுத்து? கையொப்பம் என்பது எம்மை அடையாளப்படுத்தும் ஒன்று. அந்த அடையாளம் தமிழில் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன் செய்கிறேன். குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 15 கையெப்பம் ஆவது இடுவோம். வெள்ளையர்களில் இருந்து வேற்றினத்தவர்கள் வரை என் தமிழைப் பார்க்கட்டும். அதுமட்டுமல்ல எனக்கு மின்னஞ்சல் ஆங்கிலத்தில் வந்தாலும் தமிழிலேயே பதில் கொடுப்பேன் இதைத் தேசமும் அறியும். இதனால் பாதிக்கப்பட்ட பலர் என்னிடமே தமிழ் எப்படி எழுதுவது என்று கேட்டு இப்போ தமிழில் எழுதுகிறார்கள். அதுமட்டுமல்ல பல வெள்ளையர்களுக்கு தமிழ் படிப்பித்து விட்டிருக்கிறேன். என்னாலியன்ற தமிழுக்கான பணிகளைச் செய்திருக்கிறேன் செய்வேன்.
தமிழ்மொழி உள்ளவரைதான் தமிழன் என்பதில் அசையாத நம்பிக்கை எனக்குண்டு. ஒருமனிதனின் வாழ்வுடன் தமிழை ஒப்பிடவேண்டாம். இப்மொழி வேறு மொழிகளுக்கு தாய்மொழியான மொழியை ஆயுள்வேதத்துடனும் காந்தியுடனும் ஒப்பிடுவது தகுமா? ஒத்தனையோ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் உணர்வுகளை உலகில் உலாவவிட்ட மொழி தமிழ். கன்னடம்> தெலுங்கு> துலு>மலையாளம்> சிங்களம் போன்ற பலமொழிகளின் தாய்மொழி தமிழ். ஒன்றை கருத்தில் வைத்துக கொள்ளுங்கள். பயிற்சியில் இல்லாத மொழி அழிந்துவிடும் உம் வடமொழி. தமிழ் என்றும் பயன்பாட்டில் என்றும் இருக்க வேண்டும். இதுவே எம்மினத்தின் பாதுகாப்பு. தமிழே தெரியாமல் தமிழ் பெயர்வைத்திருக்கும் பியூ தீவிலுள்ளவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. அவரின் மூதாதயர் தமிழ் என்பதற்கான ஒரு ஆதாரமே தமிழ் பெயர். தன் தமிழ் பெயரே என்ன வென்று அறியாதவரை எப்படித் தமிழர் என்பது.
thurai
//ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்களில் இருந்தே அவனை யாரென்று மற்றவர்கள் தேடுவார்கள். அப்போது அவன் தன்னை மட்டுமல்ல , தன் இனத்தையும் , மொழியையும் வாழ வைப்பான்//மாயா
நல்ல கருத்து.புலத்தில்வாழும் தமிழர் அனைவரும் செய்ய வேண்டிய முதல் கடமை. இதனை விட வேறொன்றுமில்லை.
துரை
kumar
குலன் அவர்களுக்கு
எனது கருத்துக்களுக்கு பதில் தந்தமைக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தங்கள் பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் ஏமாற்றத்தையே கொடுத்தது என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஏனெனில் தங்கள் கட்டுரை முழுவதும் அரசுசாரா உதவி நிறுவனங்களை அனுமதிக்கும்படி போராடும்படி கூறிவிட்டு அதனை நான் சுட்டிக்காட்டியவுடன் “நான் அதனை ஒரு உதாரணத்திற்காகவே குறிப்பிட்டேன்” என்று எனக்கு பதில் தருகிறீர்கள்.
“ஜக்கியம்” என்பது நல்ல வார்த்தைதான்.அதனால்தான் போலும் இன்று கட்டுரை எழுதுபவர்கள் எல்லோரும் இதனை பயன்படுத்துகின்றனர். இங்கு நான் விளக்கம் கோருவது என்னவெனில்
(1)யார் யார் ஜக்கியப்படுவது?
(2)எப்படி ஜக்கியப்படுவது?
(3)எதற்காக ஜக்கியப்படுவது?
(4)என்ன அடிப்படையில் ஜக்கியப்படுவது?
(5)யார் தலைமையில் ஜக்கியப்படுவது?
மேற்கண்ட விடயங்கள் குறித்து தெளிவாக வரையறை செய்து அதன் அடிப்படையில் கட்டப்படும் ஜக்கியமே பயன் உள்ளதாக வெற்றியளிக்கும் வகையில் அமையும். மற்ற ஜக்கியங்கள் வெறும் பேச்சளவில் வார்த்தை ஜாலத்திற்கு உதவுமேயொழிய மக்களுக்கு எந்த பயனையும் கொடுக்காது.
த.வி.கூட்டணி என்று ஒரு ஜக்கியமுன்னனி எம் மத்தியில் இருந்து வருகிறது. இது அந்த முன்னனியைக் கட்டியவர்களுக்கு பதவி சுகத்தைக் கொடுத்து வருகிறதேயொழிய மக்களுக்கு எந்த பயனையும் கொடுக்கவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.அதேபோல் இயக்கங்கள் சில இந்தியாவில் ஜக்கியமுன்னனி கட்டி பத்திரிகைகளுக்கும் பொஸ் கொடுத்தன. ஆனால் அந்த மை காயுமுன்னரே அவை தங்களுக்குள் சுடுபட்டு அழிந்தமையையும் நாம் எம் கண்முன்னே கண்டோம். இவ்வாறான அனுபவங்களை வரலாறாக கொண்டிருக்கும் எமக்கு மீண்டும் அதேபாணியில் “ஜக்கியம்” “முன்னனி” என்று பேசினால் என்ன அர்த்தம்? இதுவரை இப்படி ஏமாந்தமை எமது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் அதற்காக தொடர்ந்தும் நாம் படு முட்டாள்களாக ஏமாந்து கொண்டிருப்போம் என்று கட்டுரையாளர் எதிர்பார்ப்பது தவறாகவே இருக்கும்.
ஒருசில அரசு சாரா நிறுவனங்கள் தவறு விடுகின்றமைக்காக எல்லா நிறுவனங்களையும் அப்படி கூறமுடியாது என்று கூறும் கட்டுரையாளர் அதற்கு உதாரணமாக ஏதேனும் ஒரு அரசு சாரா நிறுவனத்தை சுட்டிக்காட்டியிருக்கலாம் அல்லவா? ஏன் சுட்டிக்காட்ட முடியவில்லை?
அமெரிக்கா புலிகளுக்குதான் எதிரியே ஒழிய மக்களுக்கு அல்ல என்றும் கட்டுரையாளர் குலன் கூறுகிறார். ஆம் அமெரிக்கஅரசு ஈராக்கில் மக்களை படுகொலை செய்வது சாதாமுக்கு எதிரானதே ஒழிய மக்களுக்கு எதிராக அல்ல. இன்று அப்கானில் மக்களை படுகொலை செய்வது அந்த மக்களுக்கு எதிராக அல்ல. மேலும் வியட்நாமில் பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்தது அந்த மக்கள் மேல் கொண்ட பாசத்தினால் என்று நம்புவோமாக! (அரசுசாரா நிறுவனங்களை அனுமதிக்கும்படி கோரும் ஒருவர் அமெரிக்க அரசுக்கு வக்காலத்து வாங்குவது ஒன்றும் அதிசயம் அல்ல. ஆனால் இதை எல்லாம் நம்புவதற்கு தேசம் வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல)
sutha
குலன் அவர்கள் அனைவரும் ஜக்கியப்பட்டு போராடும்படி அழைக்கிறார். தேசபக்தன் என்பவர் கே.பி திருந்திவிட்டார். அவருடன் ஜக்கியப்பட அழைக்கிறார். கிழக்கின் விடிவெள்ளி கருனா என்பவர் அனைத்து தமிழ்கட்சிகளையும் மகிந்த கட்சியில் ஜக்கியப்படும்படி கோருகிறார். இவர்கள் எல்லோரும் இதனை மக்களின் பேரால் கோருவதுதான் இங்கு வேடிக்கை. பாவம் மக்கள். இவ்வாறு அனைவரும் மக்கள் மேல் மிகுந்த பாசம் வைத்து பணிபுரிவதால்தான் அவர்கள் இன்று முள்ளுவேலிக்குப் பின்னால் நின்று சாப்பாட்டுக்கு கையேந்துகிறார்கள் போலும்?
இன்று எம் மக்கள் கஸ்டப்படுவது உண்மைதான். ஆனால் அதையே காரணம் காட்டி போராட்டத்தைக் கைவிடவோ அல்லது ஏகாதிபத்தியங்களிடம் சரணடைந்து பிச்சை ஏந்தவோ மக்களுக்கு வழிகாட்டக்கூடாது. மாறாக எம்மைவிட அதிக இழப்பை சந்தித்து வெற்றியைப்பறித்த போராட்ட வரலாறுகளை கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து போராட வழிகாட்டவேண்டும். போராட்டத்தின் மூலமே நல்ல தீர்வு பெறமுடியும் என்ற உண்மையை மக்களுக்கு விளக்கவேண்டும். இன்று எமக்கு தேவை உறுதியான போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையே.
பல்லி
குமார்?
//(1)யார் யார் ஜக்கியப்படுவது?
(2)எப்படி ஜக்கியப்படுவது?
(3)எதற்காக ஜக்கியப்படுவது?
(4)என்ன அடிப்படையில் ஜக்கியப்படுவது?
(5)யார் தலைமையில் ஜக்கியப்படுவது?//
பல்லி:
(1)தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ள அனைத்து அமைப்புகள்; ஊடகங்கள்; நலன் விரும்பிகள், மாற்று கருத்தாளர்; அறிவு ஜீவிகள்; யாழ் இருந்து கொழும்பு வரை; குலன் தொடக்கம் குமார் வரை ஜக்கியபடுவது எமது மக்களை இன்றய நிலையில் இருந்து காக்க மிகமிக அவசியம்;
(2)விட்டு கொடுப்போம் எம்மின மக்களின் அவலநிலை போக்க எமது தனிபட்ட விருப்பு வெறுப்புகளை விட்டு கொடுப்போம், பதவி போட்டிகளை விட்டுகொடுப்போம், அமைப்பு கருத்து வேறுபாடுகளை மக்களுக்காய் விட்டு கொடுங்கள்; சுய தம்பட்டம் வேண்டாம் சுயமாக சிந்திப்போம் விட்டுகொடுப்போம்; அனைவரது கருத்துக்கும் இடம்அழித்து அதில் யதார்த்தமானதை செயல்படுத்த ஒன்றுபடுவோம்; ஜக்கியபடுவோம்;
(3)குடும்பத்துடனும் உறவுடனும் ஊருடனும் சிறைஇருக்கும் தமிழ் மக்களுக்காக; உறுப்புகளை இழந்த எம் உறவுகளுக்காக; உறவை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்காக; எல்லாதுக்கும் மேலாக எமது அனைவரது பேயாட்டம் சதிராட்டத்தால் இன்று இருப்பிடத்தையே சிறயாக்கி பிணங்களாய் உயிர் வாழும் தமிழ் மக்களுக்காய் மக்களுக்காய்;
(4)ஆர்பாட்டம் இல்லாத அடிப்படையில் யதார்த்தமான அடிப்படையில், அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில், எல்லாத்துக்கும் மேலாக மனிதர்கள் மக்கள்மீது அக்கறை உள்ள மனிதர்கள் என்னும் அடிப்படையில்தான்;
(5)மக்கள் தலமையில்; மக்களை நேசிக்கும் தலமையில் (அப்படியாரும் தலமை இருக்கா என்ன)ஆகயால் மக்கள் தலமையில் கூட ஜக்கியபடலாமே;
இவையாவும் பல்லியின் கருத்து மட்டுமே;
குமாரின் கேள்வி அவசியமானது என்பதால் பல்லியும் பதில் சொல்ல விரும்பினேன், எழுதினேன்;
Kamal
போராட்டம் என்றதும் ஆயுதப் போராட்டம் என்ற முடிவுக்கு உடன் வருகிறார்கள் பலர். எமது அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுப்பது கூட போராட்டம்தான். உரிமைப்போரின் ஓர் வடிவமே ஆயுதப்போராட்டம். ஆயுதத்தை மட்டும் நம்பி போராடி புலிகள் தோற்றமைக்காக தமிழர் போராட்டம் தோற்றுவிடவுமில்லை. கைவிடப்படவுமில்லை.
Kulan
குமார்! நான் என்றும் கட்டுரையை எழுதிக்கொடுத்து விட்டு ஓடுவதில்லை. கேள்விகளுடன் நிற்கும் வாசகர்களுக்கு யார் பதில் சொல்வது. நான் எழுதியுள்ளேன் வாசிப்பதானால் வாசி என்று கூறிவிட்டு ஓடுவதில்லை. முடித்தவரை என் சிற்றறிவுக்கு ஏற்ப பதிலளிக்கிறேன். குமாரின் கேள்விகளுக்கு மிகத்திறமாக என்னைவிடத்திறமாக பல்லி அவர்கள் பதில் அழித்திருக்கிறார். மிக்க நன்றி. மேலும் என்குறிப்புக்களை தொடர்கிறேன்.
ஐரோப்பாவில் பல சிறு சிறு குழுக்கள் முளைத்துப் பணமும் பொருளும் சேர்க்கிறார்கள். இப்படிச் சேர்த்த பணம் பொருட்கள் தனிநபர்களின் வங்கியிலும் வீட்டுத் தேவைகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. சுனாமியைச் சாட்டி சேர்த்து பணம் சிலரின் வீட்டுத்தேவைகளுக்காக கரைத்து விட்டது. பணம் கொடுத்தவன் கேட்டால் ரசீது தந்தனாங்களா? கொண்டுவாருங்கள் என்ற பதில் கூட வந்திருக்கிறது. தவிச்ச முயல் அடிப்பதில் புலத்தமிழனின் திறமையோ திறமை.
அரசுசாரா நிறுவனங்களைக் கேட்டீர்கள் றெட்பானா> றெட் குறெஸ்> போருத்> இன்னும் இன்னும். நாம் நிறக்கண்ணாடி போடாது பார்த்தால் உண்மை சரியாகத் தெரியும்; அரசுசாரா சிலநிறுவனம் ஒன்றோ இரண்டோ புலிகள் பற்றிய தகவல்களை அரசுக்குக் கொடுத்திருக்காலாம். அது எப்படிப் பிழையாக முடியும்? ஒரு இனத்தையே 30வருடங்களாகப் தமக்குக் கேடயமாக வைத்திருந்துவர்களைக் காட்டிக் கொடுப்பது என்ன தவறு. மீண்டும் சொல்கிறேன் சிறு உண்டியல்களில் பணம் சேர்த்து தனிப்பட்டவர்கள் அனுபவிப்பதை விட அரசு சார்ந்து சாரா அமைப்புக்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்கள் ஊடகங்கள் அனைத்தும் அங்கே போவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். மற்றவர்களின் பார்வையில் எம்மக்கள் படுவதில் குமாருக்கு என்ன பிரச்சனை. நாம் இன்நாட்டில் வந்தநாள் முதல் வரிப்பணம் செலுத்தியுள்ளோம் இன்நாட்டின் அரசுசார் சாரா நிறுவனங்களுக்கும் கடமை உண்டு. எம்மக்களுக்குக் கிடைக்கக் கூடியதை ஏன் நாம் விடவேண்டும்.
//(1)யார் யார் ஜக்கியப்படுவது?
(2)எப்படி ஜக்கியப்படுவது?
(3)எதற்காக ஜக்கியப்படுவது?
(4)என்ன அடிப்படையில் ஜக்கியப்படுவது?
(5)யார் தலைமையில் ஜக்கியப்படுவது?//
குமார்! உ.ம் உம்மையும் என்னையும் எடுத்துக் கொள்வோம். நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் யார்என்பது உமக்கும் தெரியாது. எனக்கும் உமக்கும் என்ன தொடர்பு? ஆனால் ஒரு பொதுத்தளமான தேசத்தில் நாம் உரையாடுகிறோம் ஏன்? கருத்தியலில் நாம் வித்தியாசப்படுகிறோம் என்பது தெளிவு. இருப்பினும் ஒரு பொதுத்தளத்தில் நிற்கிறோம் ஒரு சிறுகட்டுரைக்காக. ஒத்துக் கொள்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு மனிதனும் எம்மக்களுக்காக விட்டுக்கொடுத்தோ விட்டுக் கொடுக்காமலோ எம்மக்களுக்காக ஒரு பொதுமைப்படலாம். முகமே தெரியாத உமக்கும் எனக்கும் பலவிடயங்கள் பொதுவானது. எம்மக்கள்> தேசம்> மொழி>கலை> கலாச்சாரம்…இன்னும் இன்னும் எம்முடன் எவ்விதத்திலும் பொதுமையில்லாத வெள்ளையருடன் சேர்ந்து வாழ்கிறோம். குடும்பம் நடத்துகிறோம். எப்படி? யார் தலைமைவகிப்பது என்பதுதான் எம்பிரச்சனையா? நல்லவிடயத்தை எம்மக்களுக்காக யாரும் எடுத்துச் செய்யலாம் தலைமை தாங்கலாம்.
Kulan
சுதா! எம்மக்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுப்பதோ போராடத் தூண்டுதோ இன்றைய பிரச்சனையில்லை. அந்தமக்களுக்கும் வயிறு என்ற ஒன்று உண்டு அதில் பசி என்ற ஒன்றும் உண்டு. இது வன்னிமக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் உண்டு. //குலன் அவர்கள் அனைவரும் ஜக்கியப்பட்டு போராடும்படி அழைக்கிறார். தேசபக்தன் என்பவர் கே.பி திருந்திவிட்டார். அவருடன் ஜக்கியப்பட அழைக்கிறார். கிழக்கின் விடிவெள்ளி கருனா என்பவர் அனைத்து தமிழ்கட்சிகளையும் மகிந்த கட்சியில் ஜக்கியப்படும்படி கோருகிறார். இவர்கள் எல்லோரும் இதனை மக்களின் பேரால் கோருவதுதான் இங்கு வேடிக்கை// சுதா! இவர்களுடன் என்னைச் சேர்க்க வேண்டாம். புலி ஆதரவற்றவர்கள்தான் வெளிநாடுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளைச் செய்தனர். புலி அதையே இழுத்துப்போட்டுப் செய்தது. மக்களுக்கு அது பிரயோசனப்பட்டபோது நாம் அதைப்பற்றிக் கதைக்கவில்லை. நிச்சயம் நாம்தான் செய்யவேண்டும் அதை யார் செய்தாலும் சரி என்று இருந்து விட்டார்கள். அதையே புலி தன் சுயலாபத்துக்காகச் செய்தபோது மாற்றுக்கருத்தாளர்கள் விமர்சித்தார்கள். புலிகளும் புலியெதிப்பார்ளர்களும் பலவிடயத்தில் ஐக்கியப்பட்டிருக்கலாம் ஆனால் நடக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன வென்றால் நான் நீ என்று நிற்கிறோமே தவிர மக்கள் என்ற ஒன்று இல்லை என்பதையே கூறுபோட்டுக் காட்டுகிறது. இதற்கு புலிகளின் அடாவடித்தனங்களும் அஜாரகங்களுமே முக்கியம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
sutha
பெருமதிப்புக்குரிய குலன் அவர்களுக்கு!
1983ம் ஆண்டும் தமிழன் வயிறுடன்தான் இருந்தான். அப்பவும் அவன் வயிறு பசிக்கத்தான் செய்தது. அப்பொழுது “சோறா சுதந்திரமா ” எனக்கேட்டு போராடும்படி கூறிய நீங்கள் இப்பொழுது தொடர்ந்து போராடவேண்டும் என நாம் கூறும்போது எங்களுக்கு “தமிழனுக்கு வயிறு இருக்கிறது.அதற்கு பசி இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். என்ன செய்வது? எல்லாவற்றையும் கேட்கவேண்டிய விதி போலும். அல்லது இதுதான் காலத்தின் கோலம் போலும்?
அரசுசாரா நிறுவனம் புலிகளைக் காட்டிக்கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கும் அதேவேளையில் புலிகளும் மாற்றுக் கருத்தாளர்களும் சேர்ந்து பல பணிகளை ஆற்றியிருக்கமுடியும் என்றும் கூறுகிறீர்கள். அதாவது புலிகள் அழிக்கப்பட வேண்டியது என்று ஒரு இடத்தில் கூறுகிறீர்கள். இன்னொரு இடத்தில் மாற்றுக்கருத்தாளர்கள் புலிகளுடன் ஜக்கியப்பட்டு வேலை செய்திருக்க வேண்டும் என கூறுகிறீர்கள். இது முரணாக தெரியவில்லையா தங்களுக்கு?
எல்லோரும் ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என்று ஒரு கட்டுரை அல்ல பல கட்டுரைகள் எழுதிவிட்டீர்கள். ஆனால் யார் யாருடன் எப்படி ஜக்கியப்படுவது என்பதை விளக்கவில்லை. அதனால் தேசபக்தன் ‘கருணா போன்றவர்களின் ஜக்கியமா என்று கேட்டால் அவர்களுடன் உங்களை சேர்க்கவேண்டாம் என்று கூறுகிறீர்கள். அனைவருடன் ஜக்கியப்பட வேண்டும் என்று கூறும் நீங்களே தேசபக்தன் கருணா புலிகளுடன் ஜக்கியப்பட முடியாது என்று கூறுகிறீர்கள்.
Kulan
சுதா //1983ம் ஆண்டும் தமிழன் வயிறுடன்தான் இருந்தான். அப்பவும் அவன் வயிறு பசிக்கத்தான் செய்தது. மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப்போடாதீர்கள்அப்பொழுது “சோறா சுதந்திரமா ” // 1983 போல்தான் தமிழர்கள் இன்றும் உள்ளார்கள் என்று நீங்கள் கருதினால் நான் அதற்கு பதில் சொல்ல முடியாது.
//போராடவேண்டும் என நாம் கூறும்போது எங்களுக்கு “தமிழனுக்கு வயிறு இருக்கிறது.அதற்கு பசி இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். என்ன // போராடவேண்டும் என்று கட்டுரையில் சொன்னது நானா? நீங்களா? இக்கட்டுரை தமிழர்கள்: தமிழர்களுக்காகப் போராடக் கூடாது என்று எங்காவது சொன்னதா? கட்டுரையை வாசித்துப் புரிந்து கொள்ளவும்:
நான் பேராடச் சொன்கிறேன் என்று நீரே சொன்ன வரிகளை இங்கே தருகிறேன்.//அனைவரும் ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என தனது கடந்த கட்டுரைகளில் வலியுறுத்திவந்த குலன் அவர்கள் இந்த கட்டுரையில் எதற்காக ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என்பதை தெளிவாக முன்வைத்துள்ளார்//
//என்ன செய்வது? எல்லாவற்றையும் கேட்கவேண்டிய விதி போலும். அல்லது இதுதான் காலத்தின் கோலம் போலும்?// நான் உங்களுக்கு பதில் எழுதிய நிலையை மட்டும் நன்கு புரிந்து எழுதியிருக்கிறீர்கள் நன்றி. உங்களைப்போல் நித்திரை கொள்பவர்களை எழுப்ப இயலாது. கேள்வி கேட்டுத்தான் பொற்கிளி வாங்கவேண்டும் என்றால் என்ன செய்வதும். உங்களைப் போன்றவர்களுடன் பொது மேடையில் நிற்கிறோமே என்ற பெருமை மட்டும் தான் மிஞ்சும்.
மாற்றுக்கருத்தாளர்கள் மட்டுமல்ல புலி எதிர்பாளர்கள் கூட புலித்தலைமை அழியவேண்டும் என்று எண்ணினார்களே தவிர புலி அடியோடு அழியவேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. தலைமையால் அழிந்து கொண்டிருந்த புலிப்பிள்ளைகளில் எல்லோருக்கும் அனுதாபம் இருந்தது. நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. வெளிநாட்டு நிறுவனங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை என்கிறீர்களா? ஏன் வெளிநாட்டவர்கள் உள்ளே போய் பார்ப்பதால் உங்கள் பொட்டுக்கேடு வெளிவந்திடும் போல் இருக்கிறது
//எல்லோரும் ஜக்கியப்பட்டு போராடவேண்டும் என்று ஒரு கட்டுரை அல்ல பல கட்டுரைகள் எழுதிவிட்டீர்கள். ஆனால் யார் யாருடன் எப்படி ஜக்கியப்படுவது என்பதை விளக்கவில்லை// இதில் இருந்து தெரிகிறது உமக்கு ஒன்றுமே விளங்கவில்லை என்று. இதுவரை உமக்கு நான் பதில் எழுதிக் கொண்டிருப்பதும் ஐக்கியம் தான்.
//அதனால் தேசபக்தன் ‘கருணா போன்றவர்களின் ஜக்கியமா என்று கேட்டால் அவர்களுடன் உங்களை சேர்க்கவேண்டாம் என்று கூறுகிறீர்கள். அனைவருடன் ஜக்கியப்படவேண்டும் என்று கூறும் நீங்களே தேசபக்தன் கருணா புலிகளுடன் ஜக்கியப்பட முடியாது என்று கூறுகிறீர்கள்.// நிச்சயமாக அவர்களும் நானும் வேறுதான். ஆனால் அவர்கள் மக்களுக்கான மக்களை மட்டும் மையப்படுத்திச் செய்படுவதை எங்காவது எதிர்த்திருக்கிறேனா? வெறும் கற்பனையில் விவாதிப்பதை விட்டு விட்டு கட்டுரையிலும் என்பின்னோட்டத்திலும் என்ன சொல்லியுள்ளேன் என்பதைத் தகவுசெய்து விளங்கிக் கொள்ளுங்கள். உமது முழுப் பின்நோட்டங்களையும் பார்த்தால் ஏதோ விவாதிப்பதற்காக விவாதிப்பதாய் இருக்கே தவிர கட்டுரைக்குள் நின்று விவாதிப்பதாய் தெரியவில்லை. நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்றால் வைத்திருங்கள். நான் எங்கும் எந்தக்கட்டுரையிலும் போராடக்கூடாது என்று கூறவுமில்லை கூறியதுமில்லை கூறப்போவதும் இல்லை. விதண்டாவாதங்களுக்கு பதிலளிப்பது சரியானதா என்று சிந்திப்பதும் ஒரு ஐக்கியப்படுவதற்கான ஒரு செயலுமாகும் அதை நான் செய்யவேண்டியுள்ளது.
முடிவுரை: நெல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழியொடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம் வல்லுலகில் நல்லார் ஒருவர் உளரோ அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்மின் மழை. இதையும் உம் கற்பனையில் ஏதாகவும் எடுத்துக் கொள்ளும். நன்றி.
மாயா
நீங்கள் எல்லோரும் ஐக்கியம் குறித்து பேசுகிறீர்கள்? சரி, இந்த ஐக்கியம் விடிவைத் தருமா? இல்லை வினையாகுமா?
புலத்தில் இருந்து கருத்து எழுதுவது இலகு. ஆனால் முகாம் நிலை வேறு. கேபீ மற்றும் சிலரது புலத்து எழுச்சி முகாம்களில் அடைபட்டு இருக்கும் மக்களுக்கு வினையாகி உள்ளதை எவரும் உணரத் தலைப்படவில்லை.
தமிழ் மக்கள் மேல் அனுதாபம் கொண்ட ஒரு சிங்கள ஊடகவியலாளரோடு பேசும் போது , முகாமில் உள்ள மக்கள் நிலை குறித்து கேட்டேன். “வெளிநாடுகளில் உள்ள கேபீ போன்றவர்களது அறிக்கைகள் அடிமட்ட படையினரிடையே ஒருவித கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அதன் தாக்கம் அப்பாவிகள் மேல் பாயலாம்” என்றார்.
அவர்கள் அப்பாவிகள் , இங்கே இவர்கள் பதவிகளுக்காக அறிக்கைகளை விடுகிறார்கள். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாதா? என்றேன்.
“யாழ்பாணத்தில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டதனால் , அதற்கு சம்பந்தமில்லா தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போது புலிகளோடு உடனிருந்த மக்கள் , இவர்களும் புலிகள்தான் என்ற நிலையில் முகாம்களில் இறுகி உள்ளனர். இவர்களது அறிக்கைகள் அவர்களது உயிருக்கு ஆபத்தை தரலாம். எப்போதும் இராணுவ தளபதிகள் அங்கு இருக்க மாட்டார்கள். இப்போதுள்ள கட்டுப்பாடு சில வேளை மீறப்படலாம். அதற்கு பின் அழுது பிரயோசனமில்லை. ஏதாவது போராட்டம் தேவையென்றால் , மக்களை குடியமர்த்திய பின் தொடரலாமே?” என்றார்.
என்னால் பேச முடியவில்லை. அவரே தொடர்ந்தார். “பாதாள கோஸ்டிகளை முடிக்க போலீசும் , படையும் திட்டம் தீட்டி செயல்படுகிறது. மெர்வின் சில்வாவோடு சென்று ரூபவாகிணி தொலைக் காட்சி நிலையத்தை தாக்கிய தாதாவை முடிக்க பாதுகாப்பு தரப்பினர் திட்டம் போட்டனர். மெர்வின் அவனை விசேட வீசா ஒன்றை பெற்று விமானநிலையம் வரை சென்று இத்தாலிக்கு அனுப்பி வைத்தார். விமானம் போகும் வரை மெர்வின் விமானத்துக்கு அருகே நின்றது எல்லாம் சட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்படி யாராவது தமிழர்களுக்கு எதிராக இறங்கினால் யாராலாவது கட்டுப்படுத்த முடியுமா? மகிந்தவால் கட்டுப்படுத்த முடியாத சிலரும் அரசில் இருக்கிறார்கள்.” என்றான்.
எனக்குள் ஒருவித அச்சம்தான் குடி கொண்டது. இங்கே வாசிக்கும் பலரது உறவுகள் முகாம்களில் இருப்பார்கள். அவர்களது நிலையை நாமும் சிந்திப்பீர்களா?
sutha
குலன் அவர்களுக்கு!
புலிகள் மாற்றுக்கருத்தை அனுமதிக்கவில்லை. கருத்துச் சுதந்திரத்தை பேணவில்லை என்று கூறும் உங்களின் கட்டுரைகள் தொடர்பாக விளக்கம் கேட்டன். ……………………….நீங்கள் குறிப்பிட்டதுபோல் நான் தூங்குவதுபோல் நடிக்கவில்லை. உண்மையிலே உங்களது அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை. அனுபவமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் எந்த மக்களுக்காக போராடப்போவதாக கூறுகிறீர்களோ அந்த அடிமட்ட மக்களில் ஒருவன்……………………………………
த.வி.கூட்டனியும் அதனைத்தொடர்ந்து இயக்கங்களும் அந்தக்காலத்தில் “சோறா சுதந்திரமா” எனக்கேட்டு மக்களை போராட்டத்திற்கு அழைத்தன. நீங்களும் கூட்டனியுடனும் இயக்கங்களுடனும் அந்தக்காலத்தில் சேர்ந்து பணிபுரிந்ததாக எழுதியதால் நீங்கள் அவ்வாறு கேட்டதாக எழுதினேன். ஆனால் நீங்கள் அவ்வாறு கேட்கவில்லையாயின் நான் எழுதியதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் மக்களை போராடும்படி கூறியது உண்மைதான். ஆனால் உரிமைக்காக போராடும்படி கூறவில்லை. மாறாக வெளிநாட்டு உதவி நிறுவனங்களை அனுமதிக்கும்படி போராடும்படி கூறுகின்றனர். எனவேதான் சோற்றுக்கு போராடும்படி நீங்கள் கூறுவதாக குறிப்பிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
வெளிநாட்டு உதவி நிறுவனங்களால் எமக்கு எந்தப்பயனும் இல்லை. அவர்களை அனுமதிக்கும்படி போராடும்படி மக்களை கோருவது அந்த நிறுவனங்களின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவைக்கும். இது இறுதியில் அந்த மக்கள் ஏமாற்றம் அடைய வழிவகுக்கும். இந்த அடிப்படையில் இந்த கோரிக்கை தவறு என்று கூறினால் அதற்கு நீங்கள் “அவர்கள் வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை?உங்கள் பொட்டுக்கேடுகள் தெரியவந்திடுமா?” எனக் கேட்கிறீர்கள். எனது மடியில் கனமில்லை. எனவே எனக்கு எந்தப்பயமும் இல்லை. …………..
தேசபக்தன் கருணா போன்றவர்களும் ஜக்கியம் பற்றி பேசுகிறார்கள். அப்படியானால் அது பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு நீங்கள் அவர்களுடன் என்னைச் சேர்க்காதீர்கள் என்று பதில் தந்தீர்கள். அப்பொழுது “எல்லோருடனும் ஜக்கியப்படும்படி கூறும் நீங்கள் இப்படி சொல்லலாமா?” என்று கேட்டால் அதற்கு “மக்களுக்காக போராடுபவர்களுடன் ஜக்கியப்படக்கூடாது என்று நான் எங்கேயாவது சொன்னேனா?” என்கிறீர்கள். இப்படி பொதுவாக பதில் சொன்னால் என்ன அர்த்தம்? அவர்களுடன் ஜக்கியப்படவேண்டுமா? வேண்டாமா? அவர்கள் மக்களுக்காக போராடுகிறார்களா? இல்லையா? இதை நேரடியாக சொல்வதில் தங்களுக்கு என்ன தயக்கம்?………..
பல்லி
மாயா உங்கள் கருத்தில் பல உன்மைகள் இருந்தாலும் நாம் தேடும் ஜக்கியத்துக்கும் மகிந்தா குடும்பத்துக்குமோ அல்லது கே பீயின் தேர் இழுப்புக்கோ சம்பந்தம் இல்லை என்பது பல்லியின் கருத்து (கட்டுரையாளர் நிலை பல்லிக்கு தெரியாது) ஆனால் நீங்கள் சொல்லும் விடயம் எதுவும் எமக்கு புதியதல்ல; ஆனால் சில காலங்களுக்கு முன்பு புலியை விரட்ட பலர் ஜக்கியபட்டதை பல்லி தங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்; அது ஊடகத்தில் பேட்டி கொடுப்பதானாலும் சரி தளத்தில் கட்டுரையோ அல்லது பின்னோட்டமோ எதுவானாலும் புலியை அழிக்க ஜக்கியபட்ட பலர்கூட இன்று சிறையில் இருக்கும் தமிழரை காக்க ஜக்கியபட சொன்னால் இது பார்த்த படம் தான் என நாடிபிடிப்பது ஏன்? சிறையில் இருக்கும் தமிழரை கே பி அல்லது உருத்திரகுமாரோ காக்க முடியாது என்பது சரியானதுதான்; ஆனால் மகிந்தா அதை விரும்ப மாட்டார் என்ப ஏன் தாங்கள் சிந்திக்க மறுக்கிறியள்; பின்னோட்டம் விடுபது சுலபம் என்பது உங்கள் குற்றசாட்டு, ஆனால் புலிக்கு எதிராக இதே பின்னோட்டம் விடும்போது அது மாற்று கருத்து என பாராட்டிய பலர் இன்று எம்மை பார்த்து தடம் புரள்வது ஏன்? ஜக்கியம் அதை இன்று வடக்கில் நடக்கும் தேர்தலில் பார்க்கலாம், இப்படி ஜக்கியமாக செயல்படும் அமைப்புகளா தமிழரை காக்க காவடி எடுப்பார்கள்;
ஜக்கியம் என்பது கூடி கும்மி அடிப்பதல்ல; தமிழருக்கு எதிராக செயல்படும் அரசுக்கு அல்லது புலிக்கோ எதிராக தனிதனியாக கூட அந்த மக்களில் அக்கறை உள்ள பலரும் செயல்படலாம் இது பல்லி சொல்லி மாயா தெரிய வேண்டியதில்லை; பின்னோட்டம் விடுவது மட்டும் எமது நோக்கமல்ல; ஆனால் தமிழரை காக்க பின்னோட்டத்திலும் அக்கறை செலுத்துகிறோம்;
சுதா போராட்டம் எதுக்கு? இதுவரை நடந்த போராட்டமோ அல்லது சதிராட்டமோ எமக்கு எதை கற்று கொடுத்தது; 1982ம் ஆண்டு நாம் இருந்த நிலைக்கு திரும்பவர என்னும் பல ஆண்டுகள் தேவை; கண்டி றோட்டில் பஸ் ஓடுவதே இன்று தமிழருக்கு சிறப்பு என அரசு அறிவிக்கும் அளவுக்கு பல உயிர்களை பலி கொடுத்து பிழைப்புகளை கெடுத்து பலஆயிரம் பெயரை அகதியாக்கி பஸ் ஓடுவதுக்கு 1981 விடுதலைக்கு என தறுதலைதனமாக போன சில வீரர்கள் சிறப்பு நாயகர்களாக போகும் நிலையிலும்கூட மீண்டும் ஒரு சதிராட்டமா? கருணாவுக்கு பின் மனைவியே போகபயப்பிடும்போது நாம் எப்படி? கே பி க்கு பின் தேசபத்தன் போவது அவரது தனிபட்ட பிரச்சனை; ஆனால் கேபீ யார் அவரது நோக்கம் என்ன அவரது கிறுக்குதனம் என்ன என்பதை மாயா மிக அருமையாக விளக்கி உள்ளார்; இவர்களது சதிராட்டம் அங்கு சிறை இருக்கும் மக்களுக்கு அவலத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கா?
இதுவரை நடந்த போராட்டம் தொற்று நோய்; ஆனால் எனி அப்படி ஏதும் நடக்குமாயின் அது தொற்று நோயல்ல தொடர் மரண ஒலியாகவோ அல்லது தொடர் பட்டிணி சாவாகவே அந்த மக்களுக்கு அமையும்; இது எழுந்தமானம் அல்ல எமக்கு 30 வருட எமது போராட்ட பயில்வாங்கள் தந்த பாடம் அனுபவம்; இதில் வேடிக்கை என்னவெனில் புலி அழிப்புக்கு மாற்று கருத்தாளரை விட அரசை விட ராணுவத்தை விட சர்வதேசத்தை விட மிக பங்காற்றிய பெருமை இந்த மாண்புமிகு கேபி யைதான் சாரும் என்பதை தேசபத்தன் போன்றோர் புரிய சிலகாலம் தேவைபடும்;
தொடரும் பல்லி……
Kulan
மாயா! நீங்கள் கூறுவது மிகச்சரியானது. புலம்பெயர் தமிழீழம் புண்ணாக்குக் கதைகள் தற்போது எம்மக்களுக்குப் பாதுகாப்பற்றது தான். அதனால் தான் போராட்டங்கள் மென்மையாக எம்வன்னிமக்களை நோக்கியதாக இருப்பது அவசியம். அதனால்தான் என்கட்டுரையில் உதவிவழங்கலை முதன்மைப்படுத்தினேன். இதை எவரையும் பாதிக்காது அதேவேளை எம்மிடையே ஒருவரையெருவர் புரிந்துணர்ந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். போராட்டத்துக்கு பொருள் இடம் காலம் முக்கியமானது. போராட்டத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலைப் பின்பு பார்க்கலாம் வன்னிமக்களுக்கு உதவி வேண்டும். அவர்கள் மேல் இராணுவமும் அரசுமல்லாத மற்றவர்கள் வெளிநாட்டவர்களின் பார்வை விழவேண்டும் இதுவும் ஒருவகைப் பாதுகாப்பே என்பது என் பணிவான கருத்து.
சாந்தன்
குலன்,
தேசத்தில் ஆக்கம் ஒன்றை எழுதி, பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கும் ஒரே ஒரு கட்டுரையாளர் நீங்கள் தான் என நினைக்கிறேன். நன்றி.
இக்கட்டுரையில் தொக்கு நிற்கும் உங்களின் ஆதங்கம் ,போராட்டங்கள் எங்கே என்பதாகவே நினைக்கிறேன். இதற்கு நான் சொல்வதெல்லாம், மக்கள் போராடினார்கள் ஆனால் மாற்றுக்கருத்தாளர் என சொல்லிக்கொள்வோர் இப்போராட்டங்கள் தவறு என்று சிலர் கீபோட்டில் போராடினார்கள். ஆனால் புலிகள் அழிந்ததும் போராடுவோம் என்று இன்னும் ஒருசரார் கதைஅளப்பு போராட்டம் காட்டினர். இதைப்போலவே இனும் இன்னோரன்ன போராட்டங்கள் நடந்தன……
ஆனால் புலிக்கதை முடிவடைந்தது ‘புலிப்பினாமிகள்’ என வர்ணிக்கப்படுவோருக்கு வேதனையைக் கொடுத்திருப்பது உண்மை. ஆனால் அதற்கு மேலாக மாற்றுக்கருத்தாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. அவர்கள் சொன்னது போல மக்களின் (புலன் பெயர்ந்த என சொல்வதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு) போராட்டம் தவறு என சொல்வோர் ஏன் இன்னும் ஒரு போராட்ட முறையினை கையில் எடுக்கவில்லை? மாற்றுக்கொள்கை போலத்தான் இதுவும் வெறும் வாய்ப்பந்தல் என்பது புரிய நாளாகாது. இதை மறுக்க இப்போது உருத்திரகுமாரன், கே.பி யை இழுக்கிறார்கள். இது இவர்கள் இப்போது ‘அராஜக அரசு’ ஒழிந்தபின் போராடப் போவோம் என சொல்வதுபோலத்தான். பாவம் இவர்கள் வெறும் கீபோட் போராளிகள், வேறு என்ன செய்ய முடியும் இவர்களால்?
மீண்டும் உங்களின் பதில்களுக்கு நன்றி!
suban
‘முடிந்துபோன புலிப்போரை மறக்கமுடியாமல் அல்லது விரும்பாமல் கனவுலகில் வாழும் ஆயிரமாயிரம் அப்பாவிகள் இனியும் ஏமாறாமலிருக்கவும் தமிழனைத் தமிழன் காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்திலும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையாகவே தெரிகிறது…
30 வருடங்களாக மூளைச்சலவை செய்யப்படடுள்ளவர்களைக் காப்பாற்ற இப்படியான கட்டுரைகள் மிக அவசியம்!'(Gee)
இப்படியாக கீபோட் போரட்டங்கள் நடத்தவேண்டியது மிகமிக அவசியம். முடிந்தவர்வர்கள் முடிந்ததைதச் செய்யலாம். இன்னும் முடிந்தோர் அதற்கு அப்பாலும் சென்று பேராடலாம்.
மாயா
//புலிக்கதை முடிவடைந்தது ‘புலிப்பினாமிகள்’ என வர்ணிக்கப்படுவோருக்கு வேதனையைக் கொடுத்திருப்பது உண்மை. ஆனால் அதற்கு மேலாக மாற்றுக்கருத்தாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை//
சாந்தனின் புரிதல் தவறாக எனக்குப்படுகிறது. புலிகள் முற்று முழுதாக அழியவில்லை. அவர்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
குலனின் கட்டுரையில் எனக்குள் முரண்பாடு இருந்தாலும் , அவரது கட்டுரைக்குள் நல் நோக்கங்களும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவரது கட்டுரைகள் புலிகளை விட்டு மக்களை பார்க்க தயாராக வேண்டும். அதுவே இன்றைய தேவை. அதை அவர் எதிர்ககாலத்தில் செய்வார் என நம்புகிறேன்.
புலிகளின் அழிவு , மாற்று கருத்தாளர்களை அழிக்கும் என்று நினைப்பது தவறு. புலிகள்தான் மாற்றுக் கருத்தாளர்களை அழித்தனர். அது இன்று அவலப்படும் மக்களுக்கு வெறும் கையை மட்டும் விட்டுச்சேன்ற நிலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் போல ஆகியுள்ளனர். புலத்து புலிகளோ தலைமைக்கும் , பணத்துக்கும் , தமது இருப்புக்குமாக மோதிக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் குறித்த கரிசனை தமது இருப்புக்கு பின்னர் என்பதையே உணர முடிகிறது. புலிகளது இயற்கை குணமே இதுதான். கூட்டமைப்பும் இதே குணமுடையோரே. அவர்கள் குறித்த ஒரு கட்டுரைபல தகவல்களை வழங்கியுள்ளது. பாருங்கள்: http://www.thenee.com/html/kp-2.html
மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது மாற்று இயக்கங்களில் தமது இருப்புக்குள் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தீங்கிழைக்காத நோக்கங்கள் இருக்கின்றன. அதை பலராலும் உணர முடியும். அவர்களும் ஒற்றுமையாக செயல்பட்டால் அந்த மக்களுக்கு பலதை வென்று கொடுக்கலாம். அந்த நிலை உருவாகும். புலிகள் இன்னமும் தமது இயக்கத்தவர்களை காப்பதையே கருத்தாகக் கொண்டு செயல்படுகின்றனர். அன்றும் – இன்றும்- என்றும் மக்களை அல்ல. அதை நாளைய உலகம் நிச்சயம் உணரும். ஏனைய மாற்று இயக்கங்களும் புலிகளின் தவறுகளை செய்வார்களானால் அனைத்து தமிழர்களும் சிங்கள கட்சிகளை அல்லது சிங்கள அரசை அங்கீகரிப்பார்கள். தவிர அவர்களோடு இணைந்து வாழும் நிலை உருவாகும்.
நாட்டில் கிடைக்காத நிம்மதி புலத்தில் கிடைப்பது போல, தமிழரால் கிடைக்காத நிம்மதி சிங்களவர்களால் கிடைக்கும் என்றால் அனைத்து தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் இல்லாமலல் போய்விடும். இதில் புலி மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்பதில்லை. இதுவே நடக்கும்.
Anonymous
போராட்டத்தை யாரும் நடத்துங்கோ.
நாங்கள் இன்னும் எழுதி கிழிக்கோனும்.
Kulan
சுதா! பல்லியின் பின்னோட்டத்தையும் வாசிக்கவும். சாந்தன் சுபன் மாயாவினது கருத்துக்களையும் பாருங்கள். சுதா! நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யப்கூடாது. புலம்பெயர் தமிழர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மிகஉன்னதமாக அவதானிக்கப்படுகிறது. இதனால் அங்கு அடைபட்டிருக்கும் யாரின் பார்வையிலும் படாதிருக்கும் வன்னிமக்களை பாதிக்கும் அன்றோல் சாதகமாகச் சாதிக்கும். நீங்கள் கூறுவதுபோல் உடனடியாக உரிமைக்காகப் போராடும் நிலையில் அங்கு மக்கள் இல்லை புலத்தில் மனங்கள் இல்லை. ஆனால் புலம்பெயர் மக்களின் ஐக்கியம் ஒன்றே அங்குள்ள மக்களுக்கு உரமாகவும் உறுதியாகவும் மனநிம்மதியையும் தரும் என்பதை யாரும் மறுக்க இயலாது. நாம் ஏதோ ஒரு சிறிய சிறிய வேலைத்திட்டங்களின் கீழ் ஐக்கியப்பட வேண்டியவர்களாக உள்ளோம்.இந்த ஐக்கியமே நாளைய உரிமைக்கான போராட்டமாக மாறும். கத்தி பாய்ந்து இரத்தம் ஓடிக்கொண்டிக்கும் போது உரிமையைப்பற்றிக் கதைக்க இயலாது. உரிமைப் போர் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு இதுவல்ல நேரம்.
பிரித்துவைத்து ஆள்வது அதிகாரவர்க்கத்தின் தந்திரம். இதைத்தான் உலகம் உருளத் தொடங்கிய காலம் முதல் அதிகாரவர்க்கம் செய்தது. இராஜபக்ச இதற்கு விலக்கல்ல. புலத்தின் ஒற்றுமையும் தூரநோக்கும் நிலத்து மக்களுக்கு உரமாகவும் மனவுறுதியையும் கொடுக்கும் என்பதை யாரும் மறுக்க இயலாது. நாம் இன்னும் உணவு அனுப்பும் விடயத்தில் கூட ஒற்றுமைப்படக் காணவில்லை எப்படி உரிமையயைப் பற்றிக் கதைக்க முடியும். எங்கள் பாட்டில் நாம் ஏதாவது ஒரு தளத்தில் கூட ஒற்றுமைகப்படாது. இழுபட்டு தான்தோன்றித்தனமாக சக்தியை விரயம் செய்து கொடு எம்மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டிராமல். தயவுசெய்து மக்களை நோக்கி சிறு சிறு வேலைத்திட்டங்களின் கீழ் ஒற்றுமைகப்படுவது இன்றைய காலத்தேவை.
Kulan
//நாட்டில் கிடைக்காத நிம்மதி புலத்தில் கிடைப்பது போல, தமிழரால் கிடைக்காத நிம்மதி சிங்களவர்களால் கிடைக்கும் என்றால் அனைத்து தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் இல்லாமலல் போய்விடும். இதில் புலி மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்பதில்லை. இதுவே நடக்கும்// மாயா! இதற்கான முன்னேற்பாட்டையே அரசு செய்கிறது.
ஆயுதம் தூக்கிப் போராடுவது மட்டுமல்ல போராட்டம் இராஜதந்திர ரீதியிலான உடன்பாடுகள்; எம்மக்களின் நலனுக்காக விட்டுக் கொடுத்தல்; சிறு சிறு ஐக்கியங்களூடு புரிந்துணர்ந்து செயற்படுதல் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் கூட ஒரு நல்ல முன்னெடுப்பே. நாம் பெற்ற அனுபவங்கள் கசப்பானதுதான். அதனூடாக மற்றவர்களும் படித்திருக்கிறார்கள். பிரிந்திருந்து கிள்ளிக் கொடுப்பதை விட அள்ளிக் கொடுக்கலாம் என்கிறேன். நாம் என்றும் பொது எதிரியை விட்டுவிட்டு எம்முள்தானே அடிபட்டு வந்திருக்கிறோம். நான் எழுதியது எல்லாம் 100 வீதம் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் கீபோட் போராட்டமாகவாவது இருக்குமல்லவா.
iyampillai
அனுபவித்து வாழ வேண்டிய வயதில் அஞ்சு சதம் செலவழிக்காது மாடாக உழைத்து காசு சேர்த்து எல்லை தள்ளி காணி சேர்த்து செத்து போகும் தமிழனுக்கு வாழ்கையை அனுபவிக்க நல்ல கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்க எப்பதான் புத்தி வரப்பபோவுதோ?
சொத்துமட்டுமே சேர்த்து செத்துபோகும் தமிழனுக்கு மனிதவாழ்க்கையை அனுபவிக்க எப்பதான் அறிவுவருமோ
பகிர்ந்து வாழாமல் பகட்டுக்கு வாழும் தமிழனுக்கு எப்பதான் பகுத்தறிவு வளருமோ?
குருட்டுதனமான எதிர்பார்ப்புகள் மடமைத்தனமான நடவடிக்கைகள் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் வங்குறோத்துதனமான அணுகுமுறைகள்
தமிழனை இன்று இந்தளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்குது
ravana
தேசத்தில் வெளிவந்த கட்டுரைகளுள் குறிப்பிடத்ததகுந்த ஒரு கட்டுரை. வழமைபோலவே பின்னூட்டங்கள் விவாதத்தை வேறுதிசையில் திருப்பி சலிப்பூட்டி விடுகின்றன.
கட்டுரையாளரின் கேள்வியும் நோக்கமும் துல்லியமானது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதோடு தமிழ் மக்களின் போராட்டம் ஓய்ந்து விட்டதா? அவ்வாறானால் ஏன் மூன்று இலட்சம் மக்களும் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும் என்ற அவர்களின் அவசரக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தொடரப்படவில்லை.
இரண்டாவது முகாம்களுள் நடைபெறும் சம்பவங்கள் வெளியே தெரியவராதவாறு உதவி நிறுவனப்பணியாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் எவரும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த அனுமதி மட்டுமே அங்குள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தும் என்பதில் ஏதாவது தவறு உள்ளதா?
அரச சார்பற்ற நிறுவனங்களின் அரசியல் பற்றி புதிதாய் எதுவும் தேவையில்லை. அவை போராட்டங்களை நசுக்கவே உருவாக்கப்பட்டன என்பது பட்டவர்த்தனமானது. புலிகளுக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பார்த்தாலே அது புரியும்.
ஆனால் இன்று வன்னி முகாம்கள் உள்ள நிலைமையில் அந்த அரசசார்பற்ற அமைப்புக்களின் பணி தற்காலிகமாகவேனும் அவசியமானது என்பதை மறுப்பவர் அந்த மக்களுடைய உயிருடன் விளையாடுபவராக மட்டுமே இருக்க முடியும்.
இப்போது அவசியமான சில விடயங்கள் உள்ளன.
1. முகாம்களில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது.
2. அந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீளவும் சென்று சுயமாக வாழ வழிகளை ஏற்படுத்துவது.
இவையிரண்டையும் அரசு பிற்போடுவதற்கு மிக முக்கியமான காரணம் புலிகள் மீளெழுச்சி பெற்றுவிடுவார்கள் என்பதல்ல. வடக்கு கிழக்கின் வளமிக்க நிலங்களை சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தி தொழில்துறை என்பவற்றுக்காக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த பல பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கவிருக்கிறது. அவ்வாறு வழங்கப்பட்ட பின்னர் அப்பல்தேசிய நிறுவனங்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கு தேவையான இராணுவ முகாம்களையும் உருவாக்கிய பின்னர் எஞ்சியுள்ள பகுதிகளியேயே இந்த மக்களை தேவை கருதி குடியேற்றத் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்துவதாயின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்திப் போராட்டத்தை நடாத்த வேண்டும். இது தான் இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும். இதற்கு ஐக்கியப்பட வேண்டியது இந்த அடிப்படையான விடயங்களைப் புரிந்து கொண்டு செயற்படத் தக்க சக்திகளே.
அமெரிக்கா மற்றும் மேற்குலகின் அரசியல் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சுயாதிபத்தியத்தைக் கோரும் எந்த மக்களுக்கும் எதிரானது என்பது வெளிப்படையானது. ஆனால் ஒப்புக்கேனும் மீள்குடியேற்றத்துக்கானது என்று கூறி வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாவது அந்த மக்களுக்குச் சென்றடைய அந்த மக்களுடைய மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்த பயன்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவக்கூடும்.
இங்கு நடாத்தப்படும் போராட்டங்களில் இந்த நிதி பயன்படுத்தம் முறை குறித்து வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதனூடாக அரசுக்கு நேரடியாகவும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மறைமுகமாகவும் அழுத்தம் கொடுக்கலாம்.
ஐக்கியம் என்றதும் அமைப்புக்களையும் தலைவர்களையும் வைத்து பார்க்கும் பார்வையை மாற்றி நோக்கங்களினடிப்படையில் ஐக்கியப்படுவது என்றால் இந்த நோக்கங்களை ஏற்றுக் கொள்ளும் எவரும் ஐக்கியப்படலாம் என்றாகும். அதுவே நோக்கத்தை அடைய வழிவகுக்கும்.
வறட்டுத் தனமான கம்யூனிஸ்ட் பார்வையையோ மக்கள் நலனை நிராகரிக்கும் வலதுசாரியப் பாதையையோ விடுத்து மக்கள் நலனை முதன்மைப்படுத்தி பிரச்சினைகளைப் பகுத்தாராய்ந்தோமானால் பிரச்சினைகளை அடையாளம் காண்பதும் அதற்காகப் போராடுவதும் தீர்வு காண்பதும் இலகுவாகிவிடும்.
வெற்றுக் காழ்ப்புணர்வுகளையும் வெட்டிப் பேச்சுக்களையும் – எழுத்துக்களையும் தான் -தவிர்த்துவிடலாம்.
பல்லி
ravana நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்; மக்களை நேசிப்பவர்கள் எழுதினாலே மக்களை ஏய்ப்பவர்கள் புறமுதுகு காட்டுவார்கள்; எமக்கு அமைப்பு வேண்டாம்,, அந்த மக்களுக்கு அமைதி வேண்டும்;;
Kulan
இராவணா! நீங்கள் இராவணனே அல்ல. உண்மையில் இராமன்தான். நான் எதைச் சொல்ல வந்தேனோ அதை அழகாக நிதானமாக உங்கள் பாணியில் சரியாகச செல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றிகள். உங்கள் மொழியாவது விதண்டாவாதம் செய்தவர்களுக்கு விளங்குகிறதா பார்ப்போம். நாம் கேட்பதையோ வன்னி மக்கள் விரும்புவதையோ அரசு தராது என்பது என்பதை அறிந்துதான் குறைந்தபட்சம் எம்மக்கள் மீது வெளியமைப்புகளின் பார்வை ஒரு சாட்சிக்காக அனுப்பவாவது குறைந்த பட்ச உடன்பாட்டுடன் ஒன்று சேருவோமா என்ன நப்பாசையில் தான் இக்கட்டுரையை எழுதினேன். பல்லி இராவணா போன்ற, நிதானமாக தூர நோக்கோடு எம்மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் பொழுது நிம்மதியாகப் பெருமூச்சு விடக்கூடியதாக இருந்தது. கட்டுரையை உள்நோக்கத்தை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லையே என்ற சலிப்புடன் நேற்று இருந்தேன். இதுப்பினும் மாயா> பல்லி> இராவணா> ஜீ போன்றோரால் நிம்மதியடைந்தேன். அறம் செய்ய விரும்பு என்று மட்டும்தான் ஓளவை சொன்னாள். விரும்பினாலே போதும் மீதி தானாகவே நடக்கும். எம்வன்னி மக்களின் தேவைக்காவது ஐக்கியப்படுவோம்.
damilan
வன்னி மக்களுக்காக குரல் கொடுக்க ஐக்கியப்பட வேண்டிய விடயங்கள் முதலாவலாக இருப்பினும் இதைவிட பல முக்கியமான சீரியசான விடயங்கள் இந்த போருக்குப் பின்னால் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சில :
1. வடக்கில் எந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் நடந்தாலும் அதில் அதில் பசில் ராஜபக்சவின் வழியாகவே நடத்தப்படுகின்றது.
2. வேலைகள் அனைத்தும் சிங்களவருக்கே வழங்கப்படுகிறது. கூலிவேளைக்கு ஆட்களும் சிங்களவர்களே.
3. எ 32 பாதை (மதவாச்சி- தலைமன்னார்) யுத்தம் நடக்கும் போது வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. காரணம் மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணையை எடுக்க இந்தியக் கம்பனியான கொயின்ஸ்க்கு போன வருடம் கொடுக்கப்பட்டுள்ளது.
4. தற்போது மடுப்பெருநாளை முன்னிட்டு சிங்களவர்கள் பஸ்களில்/வேன்களில் நேரடியாக மடு வரலாம். ஆனால் இங்குள்ள பஸ் நேரடியாக மதவாச்சி மட்டுமே போக முடியும்.கொழும்பு செல்ல முடியாது.
5. மன்னார் பேசாலையில் 25 றோலர் படகுகளுடன் மகிந்தவின் மைத்துனன் மீன் பிடிக்கிறார்.(இங்குள்ளவர்களுக்கு றோலர் பாவிக்க அனுமதி இல்லை)
இவை வெளிப்படையான சில நிகழ்வுகள் இதைவிட பல நிகழ்ச்சித் திட்டங்கள் வரையப்பட்டடிருக்கும் காலப்போக்கில் செயல்படும். இங்கு இயக்கத்தைப் பற்றி கதைப்பதையே மக்கள் மறந்து விட்டார்கள். மற்றும் யுனிசெப் யு.என்.எச்.சி.ஆர் / டி.ஆர்.சி/ சர்வோதயம் போன்ற நிறுவனங்கள் முகாம்களுக்கு செல்கின்றன.
முன்னைய அரசுகள் யுத்தத்தைக் காட்டி உழைத்தது. இந்த அரசு வன்னி மக்களையும் வடக்கையும் காட்டி உழைக்கின்றது. மன்னாரில் குறித்த முகாம் ஒன்றில் கணனி வைத்துக் தமது பிள்ளைகளுக்கு படிப்பிக்கின்றார்கள்.
மக்கள் ஐக்கியப்படுவதற்கு பொதுவான அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும்.அதில் பல அடிப்படை பொதுவான கோரிக்கைகள் வரிசையாக இருக்கலாம் இதை வைத்து இலங்கையில் இருந்து பிரசாரப்படுத்தி வெளிநாட்டு தமிழர்களின் ஆதரவுடன் இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றினைக்கலாம். இக் கோரிக்கைகள் மக்களின் அடிப்படை விடயமாக மக்களால்/புத்திஜீவிகளால் இனங்காணப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும்.
1. மீள்குடியேற்றம்
2. கைதிகள் விடுவிப்பு
3. வேலை வாய்ப்பு
4. புனர்நிர்மாணம்
போன்றனவாக இருக்கலாம் இதில் எந்தத் தமிழருக்கும் ஐக்கியப்படுவதில் பிரச்சினை இருக்குமா ?