இங்கிலாந்தின் அழகுராணியாக முதல் தடவையாக கறுப்பின அழகி

miss_england-2009.jpgஇங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். இவர் முன்னாள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சாம்பியன் லின்போர்ட் கிறிஸ்ரியின் மைத்துனி ஆவார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை கார் விபத்து ஒன்றுக்கு ஆளாகிய ரேசல், சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓர் இரவை மருத்துவ மனையில் கழித்தார். இந்நிலையில் தைரியத்துடன் அழகுராணிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ள ரேசல் விபரிக்கையில், “”நான் வாழ்வில் எதைத் தெரிவு செய்தாலும், அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்” எனத் தெரிவித்தார்.

மத்திய லண்டனில் மெற்றோபோல் ஹில்டன் ஹோட்டலில் மேற்படி அழகுராணிப் போட்டி நடைபெற்ற போது இந்தப் போட்டியானது பாலியல் ரீதியான காட்சிப்படுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்து ஹோட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

“ஒவ்வொரு பெண்ணும் ஒரு ராணிதான்’, “அழகு என்பது தோலில் இல்லை’ போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • tamil boy
    tamil boy

    ரேசல் கிறிஸ்ரிக்கு பாராட்டுக்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    “ஒவ்வொரு பெண்ணும் ஒரு ராணிதான்’, “அழகு என்பது தோலில் இல்லை’ அது மனதில் உள்ளது. வாழ்த்துக்கள் ரேசல் கிறிஸ்ரி. ஒலிம்பிக் கனவும் நனவாகட்டும்.

    Reply
  • muniamma
    muniamma

    குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி குண்டுமணிதான். அழகே உன்னை ஆராதிக்கின்றேன்.

    Reply
  • kumarathasan
    kumarathasan

    skin colour matter in this world. we dont have a chance to dark skin in tamil industry, it can be in hollywood too.whats exactly happen is politics well played on this matter.obama, kristi, and many faces will come.please dont get too emotional on this.
    when will tamil girl crown?

    Reply