வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார்.
அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தமது அலுவலகத்திற்கு சென்று புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார்.
இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரட்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கள முனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கிவந்தார்.
நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று கள நடவடிக்கைகளுக்குப் பாரிய ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளார்