பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர் போலிக் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சிவபாலன் துரை என்ற இலங்கையர் பார்க் றோயல் பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலியான பிரெஞ்சு கடவுச்சீட்டு, 2 போலி தேசிய காப்புறுதி அட்டைகள், 2 பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப் பத்திரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட சிவபாலன் துரையுடன் மற்றொரு புகலிடம் மறுக்கப்பட்டவரான சக்திவேல் சஞ்ஜீவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்ணாடி தயாரிப்பு பணியாளர்கள் இருவருடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்றைய இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலை வழங்கிய சுப்பர் ரவ்கீறெட் கிளாஸ் நிறுவனம் 40,000 ஸ்ரேர்லிங் பவுண்ஸ் வரையிலான அபராதத்தை இப்போது எதிர்நோக்கியுள்ளது.