தம்புள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொது மக்களால் கையளிக்கப்படும் தந்திச் செய்திகள் யாவும் சாதாரண தபாலிலேயே அனுப்பப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாத்தளை மாவட்ட தபால் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில்;
அஞ்சல் அலுவலக தந்திச் சேவகர்களாகக் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் வேறு அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை பிரதேசத்தில் அதிகரித்திருப்பதாலும் தந்திச் சேவைகள் நட்டத்தில் இயங்குவதால் இத்தகைய தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
தந்திச் செய்திகள் தபாலில் அனுப்பப்படுவதால் கிராமப்புற மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சீரான தந்திச் சேவையைப் பெற்றுத் தருமாறும் மக்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்