பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஏ 9 வீதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இந்த வீதியைத் திறந்துவைத்தார்
இந்த வீதியினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து 210 பிரயாணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் ஐந்து பஸ் வண்டிகளில் இன்று மதவச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நண்பன்
யாழ்பாணத்திலிருந்து பயணிக்கும் பஸ் வண்டி மதவாச்சி வரை பயணிக்கிறது. அங்கிருந்து கொழும்பு செல்ல இன்னுமொரு பஸ் வண்டியில் மாறி செல்ல வேண்டும். ஒரு பிரயாணிக்கான பஸ் கட்டணமாக 325 ரூபா அறவிடப்படுகிறது.
யுத்த காலத்தில் யாழ்பாணத்திலிருந்து இரத்மலானைக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 11 ஆயிரம் (11´000/-) ரூபாவாகும். யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை வரையிலான கப்பல் கட்டணம் 3200 ரூபாயாகும். இன்று தொடங்கப்பட்டுள்ள பயணிகள் பஸ் சேவை மூலம் வசதி குறைந்தவர்களும் பயன் பெறுவார்கள்.