சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.
காலை 9.00 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளதோடு அன்றைய தினம் மாலை சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.