இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 வது இன்னிங்சில் பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவின்போது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது.
பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது. பின்னர் வந்த மலிக், மிஸ்பா உல் ஹக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த சோடி இணைப்பாட்டமாக 119 ஓட்டங்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நேரத்தில் மிஸ்பா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்பு மலிக்குடன் அக்மல் இணைந்து 3ம் நாள் ஆட்ட முடிவின் போது இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்று அணியை மேலும் ஸ்திரனப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது மலிக் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்கங்களையும், அக்மல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கங்களையும் பெற்றிருந்தனர்.
பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 22 ஓட்டங்களுக்கும் 3வது விக்கெட்டை 54 ஓட்டங்களுக்கும் 4 வது விக்கெட்டை 67 ஓட்டங்களுக்கும் 5 வது விக்கெட்டை 186 ஓட்டங்களுக்கும் இழந்தது.
இலங்கை அணியின் சார்பாக பந்து வீச்சில் ஹேரத் 2 விக்கெட்டையும், துஷார, குலசேகர, மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது பாகிஸ்தான் அணி 366 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Pakistan 1st innings: 299
Sri Lanka 1st innings: 233
PAKISTAN 2nd innings (overnight 16-1)
Khurram Manzoor b Herath 2
Fawad Alam c and b Thushara 16
Younus Khan lbw b Kulasekera 19
Mohammad Yousuf c Sangakkara b Herath 23
Misbah-ul Haq c Sangakkara b Mathews 65
Shoaib Malik not out 106
Kamran Akmal not out 60
Extras: (b6, lb2, w1) 9
TOTAL (for 5 wkts, 95 overs) 300
Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf), 5-186 (Misbah).Bowling: Kulasekera 15-5-33-1 (w1), Thushara 19-2-84-1, Herath 37-6-113-2, Vaas 14-6-29-0, Mathews 10-1-33-1.