இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 14 மில். அமெ. டொலர் நிதியுதவி

jams_usa.jpgஇடம் பெயர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.

இடம்பெயர் மக்களது உணவு விநியோகத்தைச் சீர் படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மதன்
    மதன்

    எவரது பண உதவியும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதற்கு சுனாமிப் நிதிப் பண மோசடியும் அது சம்பந்தமாக ஏற்படுத்தப் பட்ட இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பும் செயலற்றுப் போகச் செய்த இலங்கை அரசா இப்போது தமிழருக்கு உதவப்போகிறது?

    சொல்லுவார் சொன்னாலும் கேட்பவருக்கு என்ன மதி என்று ஒரு தமிழ் பழமொழி இருக்கிறதே.

    Reply
  • Kirupa
    Kirupa

    முகாம்களில் உள்ள புலிகள் அடையாளம் காணப்பட்டு வேர் அறுக்கப்படும் வரையில் மீள்குடியேற்றம் இல்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

    அப்பிடியானால், மரம் வளர்ந்து வேர் விடும் வரை.. முகாம்கள் மூடமாட்டார்கள் என்பது திண்ணம்.
    முகாம்கள் தஙக வாத்துகள் அவர்களுகு.

    Reply