கறுப்பு ஜூலை நினைவாக பிரான்ஸில் இன்றும், நாளை மறுநாளும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது. 1983 யூலை 23 தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் நடைபெறவுள்ளது
இடம் – பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கம்
காலம் – 23.07.2009 வியாழக்கிழமை
நேரம் – பி.ப 16.00 மணி தொடங்கி 18.00மணி வரை
Métro – Trocadéro – Ligne 6, 9
கறுப்பு யூலை நாளை முன்னிட்டு நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து 24 மற்றும் 26ம் திகதிகளில் பஸ்ரில் பகுதியில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 19.00 மணிவரை கவனயீர்ப்புப்போராடட்டம் நடைபெறும் அதேவேளை 26ம் திகதி மதியம் இரண்டு மணிக்கு றீப்பப்ளிக் பகுதியிலிருந்து மாபெரும் கண்டனப்பேரணி ஆரம்பமாகி ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஸ்ரில் பகுதியை வந்தடையவிருக்கிறது.
மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது எமது மக்களைக்காப்பாற்ற பிரான்சு வாழ் தமிழ் அணிதிரள்வோம் என பிரான்ஸ் ஒருங்கமைப்பு குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளது.
chandran.raja
கறுப்பு யூலையை தொடக்கி வைத்தவர்களும் முடித்து வைத்தவர்களும் யார்? என்பது தெரியும். இருவரும் இனவெறியர்களே! இது இலங்கை மக்களுக்கு அதாவது உழைப்பாளி மக்களுக்கு அலைச்சல் பிடித்த காலங்களாகும். தொடக்கி வைத்தவர்களும் முடித்து வைத்தவர்களுக்கும் நீண்டகாலங்கள் வெள்ளிதிசை யோகம் வீசித்தள்ளியது அத்துடன் இயற்கையும் உதவிபுரிந்தது போல சுனாமியும் அவர்களை உச்சத்தில் ஏற்றி வைத்தது.
இந்த யோகபலன்கள் அன்றாடக்காச்சிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. மாறாக சகோதரனை இழந்தார்கள் சகோதரியை இழந்தார்கள். பிதாக்களுடைய சடலங்ளைக் கூட காணமுடியாதவர்கள் ஆனார்கள். இது எமக்கு கிடைத்த தண்டணை மாதிரியே இறுதி வாழ்விலும் நிலைத்து நிற்கும். இன்று நிலைமை அப்படியில்லை எல்லாவுமே மாறிவந்துள்ளது. யுத்தவிமானங்களின் பயம் இல்லை. பங்கர் இல்லை. முப்பது வருடம் மறுக்கப்பட்ட மீனவர்கள் சுகந்திரவாழ்வு படிப்படியாக மேன்மை பட்டுவருகிறது. இலங்கை மக்களுக்கு தடையாக குறிப்பாக விவசாயிகளுக்கு இருந்த போக்குவரத்து பாதை நாள்ளாந்தம் சீர்பெற்று வருகிறது.
அரசியலை கதைப்பதற்கு பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கவேண்டும். உரிமையை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையோல் எமது சந்ததியை நிர்கதியில் விட்டவர்யாவோம். அரசியல் என்பது ஜாதிபேதங்களை தவிர்த்து நாட்டுமக்கள் அதாவது இலங்கைதீவின் பெரும்தொகையான மக்களின் நலன்களில் இருந்து உதித்து எழுபவையே.
sekaran
யூலை மட்டுமா கறுப்பு?
நண்பன்
நம்மினத்தில் சாவுகளையும் , செத்தாலும் வாழ்வோம் என நிகழ்வுகளை நடத்துவோர், அந்த இனம் வாழ வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி எதையும் செய்வதில்லை. இனி வாழ வழிகாட்டும் கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும். மாவீரர் , வீர மக்கள் தினம் போன்றவற்றை உதறித் தள்ளி விட்டு , மனிதர்கள் முன்னேறி வாழ்வதற்காக வழி காட்டும் கூட்டங்களுக்கு செல்லுங்கள். நீங்களும் வாழ்வீர்கள். அடுத்தவர்களும் வாழ்வார்கள். சமூகமும் வாழும். இனியாவது உண்மையாக நடக்க முயலுங்கள். புலம் பெயர் நாடுகளுக்கு வந்தும் அந்த குப்பை அரசியலுக்குள் மக்களை இட்டுச் செல்லாதீர்கள்.
BC
//நண்பன் – மாவீரர் , வீர மக்கள் தினம் போன்றவற்றை உதறித் தள்ளி விட்டு , மனிதர்கள் முன்னேறி வாழ்வதற்காக வழி காட்டும் கூட்டங்களுக்கு செல்லுங்கள். நீங்களும் வாழ்வீர்கள். அடுத்தவர்களும் வாழ்வார்கள்.//
புலம் பெயாந்த பலருக்கு அவசியம் தேவையான அறிவுரை.