அக்கரைப் பற்று தள வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 883 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி குறிப்பிட்ட வைத்தியசாலையின் வார்ட்கள் தொகுதி, விசாரணைக் கூடம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை அமைக்க 8 கோடியே 83 இலட்சத்து 88 ஆயிரத்து 996 ரூபா வழங்கப்பட உள்ளது.