தேசிய விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பொலன்நறுவையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, தேசிய ஏர் பூட்டும் விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வவுனியா, நெடுங்குளம் வயல்வெளியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடும் கூட்டமொன்று விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் வவுனியாவிலுள்ள விவசாயக் கல்லூரியில் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.