பாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்று நான்காவது நாள் போட்டி போட்டி நேர முடிவின்போது 3 விக்கட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.
நேற்றைய தினம் இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது 03 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான வர்ணபுர 31 ஓட்டங்களுடனும் பரணவிதாரண 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கிரிக்கட் ரசிகர்களால் மஹேல ஜயவர்தன நேற்றைய தினம் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும்கூட அவரால் இரண்டு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. ஓப்சைட்டில் சென்ற பந்திற்கு பெட்டை நீட்டியதால் அக்மலிடம் பிடிகொடுத்து இரு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காது அணித் தலைவர் சங்கக்கார 50 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று 5வதும் இறுதியுமான நாளாகும். முதலாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது நெற்றியில் காயமேற்பட்டுள்ள டில்சான் இரண்டாவது இனங்சில் துடுப்பெடுத்தாடுவாரா என்று நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்படவில்லை. எஸ்.எஸ்.ஸி மைதானமானது ஐந்தாவது நாள் பந்து வீச்சாளர்களுக்கு சார்பாக இருக்குமென கிரிக்கட் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எனவே இன்று ஆரம்பமாகும் இரண்டாவது இனிங்சில் இலங்கை தனது வெற்றியிலக்கை அடையுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஸ்கோர் விபரம் வருமாறு:
PAKISTAN 2ND INNINGS (overnight 300-5):
Khurram Manzoor b Herath 2
Fawad Alam c and b Thushara 16
Younus Khan lbw b Kulasekera 19
Mohammad Yousuf c Sangakkara b Herath 23
Misbah-ul Haq c Sangakkara b Mathews 65
Shoaib Malik c sub (Lakmal) b Herath 134
Kamran Akmal c Jayawardene b Kulasekera 74
Umar Gul c Vaas b Herath 46
Danish Kaneria c Thushara b Herath 5
Mohammad Aamer not out 22
Saeed Ajmal not out 3
Extras: (b10, lb2, nb2, w2) 16
Total (for 9 wkts decl, 123 overs) 425
Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf),
5-186 (Misbah), 6-319 (Akmal), 7-371 (Malik), 8-399 (Gul), 9-405 (Kaneria).
Bowling: Kulasekera 20-5-55-2 (w1), Thushara 28-2-121-1 (nb2, w1),
Herath 46-6-157-5, Vaas 19-6-47-0, Mathews 10-1-33-1
SRI LANKA 2ND INNINGS:
T. Paranavitana c Alam b Malik 73
M. Warnapura c Malik b Kaneria 31
K. Sangakkara not out 50
M. Jayawardene c Akmal b Kaneria 2
T. Samaraweera not out 20
Extras: (lb5, nb2) 7
Total (for 3 wkts, 59 overs) 183
To bat: Tillakaratne Dilshan, Angelo Mathews, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene).
Bowling: Gul 6-0-27-0 (nb1), Aamer 9-0-20-0, Younus 3-0-16-0, Ajmal 16-1-36-0, Malik 9-1-23-1 (nb1), Kaneria 16-1-56-2.
kumarathasan
sangakara scored 130 unbeaten and mathew 102 and match has been drawn.