தமிழ் பெண்ணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்வு சலுகையாகக் கருதுகிறாரா மகிந்தானந்த?

mahindanandaaluthgamage.bmpமின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையானது தமிழ்ப் பெண்களையும் அவர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த ஆற்றிய உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேநேரம், தமிழ் மக்களும் இந்த கூற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

போரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் மிகப்பெரும் துயரங்களை அனுபவித்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியிருப்பது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணொருவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மகிந்தானந்த அளுத்கமகே கூறியமையையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தமிழ்ப் பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்துடன் வாழ்பவர்கள். ஆனால், தனது மனைவிக்கு அடுத்ததாக இரண்டாவது மனைவியாக தான் தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அவரின் கருத்தானது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்வழிப்பதையும் தமிழர்களுக்கான சலுகையாக அவர் கருதுவதாகவே தெரிகிறது. இக்கருத்தைத் தமிழ் மக்களை ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • kamal
    kamal

    இந்தக்காரணங்களை அடிப்படையாக வைத்தே போராட்டம் ஆரம்பித்தோம் ஆனல் இடையில் வந்த பாசிச பிரபாகரன் செய்த கொலைகள் எம்மை எப்படி திசைதிருப்பி விட்டது – எத்தனை தடவைகள் எத்தனை தீர்வுகள் வந்தது ஒன்றை ஏற்றிருக்க வேண்டாமா?

    Reply
  • மகுடி
    மகுடி

    ஐயோ இதுக்கே இந்த கூத்தா? புலத்தில இதைவிட எத்தனை கூத்து நடக்குது. புலிகளது இளையோர் அமைப்பினர் நடத்தும் கூத்துகளை எழுதினால் சுரேஷ் என்ன சொல்வாரோ?

    Reply
  • Rohan
    Rohan

    //தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணொருவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மகிந்தானந்த அளுத்கமகே கூறியமையையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.//

    தனது கணவனை இழந்த பெண் ஒருவரை அவரது சம்மதத்துடனும் இரண்டாவது மனைவியாக ஏற்பதில் எதுவும் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    Reply
  • msri
    msri

    பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன்> கடந்தகாலங்களில் புலிகளுடன் சேர்ந்து> தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக நின்ற பழக்கதோசத்தில்> ஒருபெண்ணின் திருமண அபிலாசைக்கு எதிராக பல> கதைகள் சொல்கின்றார்! இவர் சொல்லும் கதைகளுக்குள் இழையோடுவது> குறுந்தேசிய இனவெறியே! ஒருத்தனுக்கு ஒருத்தியென புராண இதிகாச சங்க இலக்கிய தத்துவம் பேசுகின்றார்! கிழக்கு மாகாணத்தில் நாறபதினாயிரத்திற்கு மேற்பட்ட் தமிழப்பெண்கள் விதவையாக உள்ளனர்> அவர்கள் மறுமணம் செய்ய முற்பட்டால் அவர்களை தீக்குளிக்கச் சொல்வாரோ?

    Reply
  • மாயா
    மாயா

    தமிழ் அரசர்களது அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்ந்தோரா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஆயுதம் ஏந்தாத புலிகளின் கண்டுபிடிப்புகள் இரண்டும்கெட்டான் நிலைக்கே! கொண்டு செல்லும். அடுத்த பாராளமன்ற தேர்தல் வரை தலையால் கிடங்குகிண்டி எடுக்கிற பல கண்டு பிடிப்புகளை நாம் கண்டுகழிப்பதற்கு எம்மை திடமாக வைத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

    Reply
  • appu
    appu

    அளுத்கம அப்படிக் கூறினாலும் அதை நெறிப்படுத்த அவர் மனைவி என்ன நீதிபதியா? சட்டப்படி மணம் செய்த மனைவி உயிருடன் இருக்கும்போது எப்படி இன்னொரு தமிழ்ப்பெண்ணை மறுமணம் செய்யமுடியும் அல்லது அதற்கு அனுமதி அளிக்க அவரது மனைவி என்ன நீதிபதியா? இதைத்தெரிந்து கொள்ளாத கூத்தமைப்பு உறுப்பினருக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தெரியப்போகின்றதோ. சுரேஷ் பிரேமச்சந்திர இதைச்சாட்டாக்கி தேர்தலில் தமிழ்பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஐடியா போட்டுவிட்டாரோ. முகாம்களில் வாழும் ஏதாவது ஒரு பெண்ணுக்காவது இவர் ஒருவேளை உணவு கிடைக்க வழி செய்திருப்பாரா? அடுத்தவர்களைப்பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

    Reply