சிங்கப் பூரிலிருந்து நாடு திரும்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதிச் சோதனைப் பொலிஸார் இவர்களின் பொதிகளைச் சோதனையிட்டனர்.
அதன்போது அவற்றில் 72 கையடக்கத் தொலைபேசிகள், உதிரிப்பாகங்கள், மூன்று டிஜிற்றல் கமெராக்கள், 12 விஸ்கி போத்தல்கள், ஒரு லப்டொப், இரண்டு காட்டுன் சிகரட்டுகள் என்பனவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்களின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.