தாண்டிக் குளம் வரையில் விஸ்தரிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவையை ஓமந்தை வரையில் விஸ்தரிப்பதற்காக ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சர் விஜய சமரசிங்க தெரிவித்தார். தண்டவாளங்கள், ரயில் நிலையம் மற்றும் ரயில் சமிக்ஞை விளக்குகள் என்பன சீரமைக்கப்பட்டவுடன் இன்னும் மூன்று மாதத்தில் இந்தசேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புலிகளுடனான போர் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து வடக்கிற்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்பட்டன. அச்சேவையை ஓமந்தைவரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கின் நண்பன் வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் முழுமையாக விஸ்தரிக்கப்படவுள்ளன. இதற்காக 14 பில்லியன் ரூபா செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.