அமெரிக் காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி அமைச்சர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் இன்று இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க உதவி அமைச்சர் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதுடன், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இவர் சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கான ஐ.நா. வின் விசேட பிரதித் தூதுவராக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.