புத்தளத் திலிருந்து அநுராதபுரம் வரையிலான ஏ12 வீதியின் 50 கிலோ மீற்றர் தூரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் .ஏக்கநாயக்க வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கின்றார்.
கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான ஏ3 வீதியில் நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் வரையிலான பகுதி முழுமையாக கார்பட் போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அப்பால் உள்ள அநுராதபுரம் ஹொரவ்பத்தானை திருகோணமலை வரையிலான ஏ12 வீதி புனரமைக்கப்படவில்லை.இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்து அதிக அளிவில் இடம்பெறுவதுடன் வாகன நெரிசலும் நிலவி வருகின்றது.
இந்தப் பகுதியை புனரமைப்பதன் மூலம் மேற்கு, வடமத்தி, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.