விடு தலைப்புலிகளின் தலைவராக செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டிருக்கும் விடயம் முக்கியமற்றதொன்று என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் சேகரித்திருந்த பெருந்தொகையான பணத்துக்கு உரிமை கோருவதற்காக தலைமைப்பதவியை குமரன் பத்மநாதன் ஏற்பார் என்பது குறித்து தாங்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஆனால், இயங்க முடியாத அளவுக்கு புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாதனின் நியமனம் தொடர்பாக அச்சுறுத்தல் குறித்து அரசு அச்சம் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தற்போதும் கடுமையான முறையில் அமுலில் இருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளச் சேவைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளார்.