வவுனியா தேர்தல் : த.வி.கூட்டணி – இரு சுயேச்சை குழுக்கள் ஈபிடிபியை ஆதரிக்க முடிவு

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்புடன் முன்னர் கூட்டுச் சேர்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளை, அரசின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இணைத்தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. த.வி.கூ. நிர்வாகச் செயலாளர் ஜீ.வி.சகாதேவன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இந்த முடிவை அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Muralyswiss
    Muralyswiss

    கூட்டணி உருப்பினர்கள் யதார்த்தத்தை உணர்ந்து காலத்திற்கேற்ற சரியான முடிவு எடுதுள்ளார்கல் வாழ்த்துக்கள். சஙரியார் சொல்வது போல் புளுத்துப்போன அரசியலில் இருந்து சாத்தியமான, மக்கள்நலன் சார்ந்த, காலம் காலமாய் மக்களுடன் வாழும் மக்களின் தலைவன் டக்ளஸ் உடன் இணைவது இன்றய காலத்தின் தேவை.மீண்டும் வாழ்த்துக்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    யாழ்ப்பாணத்தில தனித்தும் வன்னியில கூட்டணியோட ‘கூட்டணி’யும் வச்சவை புளொட்காரர். ஏனெண்டால் சங்கரிக்கு தெரியும் யாழ்ப்பாணத்தில தனக்கு புளொட்டிலும் விட ’செல்வாக்கு’ பரவாயில்லை எண்டு. வன்னி நிலமை அப்பிடி இல்லை. ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னர் சங்கரி சொன்னால் தங்களுக்கு ஈ.பி.டி.பி யாழில தொல்லை குடுக்கினம் றோட்டால ஆக்கள் போகேலாமல் கிடக்கு….எண்டு பல பல குற்ரச்சாட்டு சொன்னார். இப்ப என்னடா எண்டால் வன்னி/கிளிநொச்சி ‘பிராந்தியக் கிளை’ ஈ.பி.யோட நிக்கப்போறம் எண்டினம்.ஆனால் ஏன் எண்டு சொல்லேல்ல. அப்பதானே கேக்கிற ஆளுக்கேற்ப ‘மக்கள் நலன்’ ‘மக்கள் சேவை’ ‘காலத்தின் தேவை’….இப்பிடி கதை அளக்கலாம்.

    தலைவர் சங்கரி சவுத் ஆபிரிக்காவில காந்திசிலைக்கு முன்னால தோழரேட நிண்டு படமெடுத்துப்போட்டு ஸ்ரீலங்காவந்து முண்டுப்படேல்லயே அதுமாதிரி இப்ப ‘பிராந்தியக் கிளை’ இணைத்தலைவர் கதை விடுறாரோ?

    விசயம் இங்க இருக்கு..ஏதோ ஒரு வகையில் எண்டதில ‘கூட்டணி’ பிரதேச கிளை சிக்கலும் இருக்குதோ?

    ‘..நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை ,வவுனியா நகரசபை தேர்தலில் ஏதே ஒருவகையில் வெற்றிபெற்று நியாயபடுத்துவதற்க்காக முயற்சி செய்வதாக தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில்(Thamil broadcasting corporation-London ) சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்…’

    Reply