வடக்கே நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறார்களென்று சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை நண்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி வீதியில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது;
இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று அரசு கூறிவருகிறது. அத்துடன், நாட்டில் எதுவித பிரச்சினைகளும் இல்லை. சகலரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் எனவும் அரசு கூறிவருகிறது. எமது மக்களைப் பொறுத்தவரை சரித்திர ரீதியாக இந்த நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எமது உரிமைக்காகவே போராடியும் வருகிறோம்.
குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையான இந்தக் கோரிக்கையை நாம் நீண்டகாலமாகவே விடுத்துவருகின்றோம். எமது சுயநிர்ணய உரிமையை,சரித்திர ரீதியாக நாம் வாழ்ந்து வரும் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது நீண்டகால போராட்டத்தின் ஒரு அங்கமே. அந்த போராட்டம் முடிவடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைக்கான போராட்டம் இன்னமும் பூர்த்தியாகவில்லை.
எம்மை பொறுத்தவரையில் எமது அபிலாசைகள் பூர்த்தி அடைந்து ஒரு அரசியல் நிலைமை ஏற்பட்டால்தான் நாம் இந்த நாட்டில் சம உரிமையுடன் கௌரவத்துடன் சுயமரியாதையுடன் வாழ முடியும். அதனால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு தற்போது வவுனியா நகரில் வாழ்கின்ற மக்களையும் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களையும் சார்ந்தது.
நாம் யாரையும் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களையும் நேசிக்கின்றோம். சகோதரர்களாக கருதுகின்றோம். ஆனால் எமக்கு இந்த நாட்டில் சமத்துவம், சம உரிமை, பாதுகாப்பு வேண்டும். இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் நாம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். என்றார்.
msri
ஆயதப்போராட்டம் முடிவடைந்தாலும்> தமிழ்மக்களின் அபிலாசைப் போராட்டம் முடிவடையவில்லை! என்கின்றார் சம்பந்தன்! நீண்டகாலத்திற்குப் பிற்பாடு மக்கள் நலன் சார்ந்த> மக்கள் மத்தியில் சொன்ன நல்லதொரு கருத்து! இப்போக்கு தொடரப்படவேண்டும்! ஆனால் டக்ளசு சொல்லி விட்டார்> நடைபெறவிருக்கும் யாழ்+வவுனியா உள்ளாட்சித் தேர்தல்களில் >மக்கள் வெல்ல வைக்காவிட்டாலும்! எங்களால் (வாக்குப் பெட்டிகளை நிரப்புவது) வெல்லவைக்கப்படும் என! அப்ப வெற்றி> யாருக்கு நிச்சயமாக உங்களுக்கல்ல! மகிந்தாவிற்கே!
stephen brito
தமிழ் மக்களின் அபிலாசைகள்: ஆங்கிலம் படிக்க வேணும். ஆங்கிலத்தில் கையொப்பம் போடவேணும் திரைகடல் ஓடியாவது திரவியம் தேடுவது எல்லை தள்ளி காணி பிடிப்பது. காசும் சொத்தும் சேர்த்து விட்டு செத்தது போவது.
வாழ்கையை அனுபவிகத்தெரியாத காசும் சொத்தும் சேர்ப்பதே குறியாக் உள்ள தமிழன்.
ஷோ காட்டி வாழ் விரும்பும் தமிழன் ஷெயார் பண்ணி வாழத்தெரியாத சுயநலவாதி.
Kusumbo
குத்துக்கரண வீரர்களே! கூத்தணியினரே! உப்பிடி பேசிப்பேசித்தானே மக்களும் வோட்டுப் போட்டுப் போட்டு வேட்டு வாங்கிறார்கள். வெழுத்துக் கட்டுங்கோ. உங்களுக்கு ஏதும் வந்தால் மலைதானே.
nallurkantha
Dear Sambanthar Sir,
Dont damage the Tamil community further.I can remember you were the important person when your supporters carried the Asthi of Thantha Selva around trincomalle town and created a communal trouble in Trincomalee.You people always wanted communal troubles whic you have manipulated and put the blames on the Innocent Sinhalese.Pl honourably reire from politics.