கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானதாக இலங்கை விமானப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தகவல் தருகையில், இந்த விமான சேவை திங்கள், புதன், மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வாரத்துக்கு மூன்று தடவைகள் நடத்தப்படவுள்ளதோடு இருவழிப் பாதைக்குமான கட்டணமாக 19 ஆயிரத்து 100 ரூபா அறவிடப்படும்.
திருகோணமலை மற்றும் சீகிரியா ஆகிய நகரங்களுக்கும் விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. வாரமொருமுறை நடத்தப்படவுள்ள இச்சேவை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு ரத்மலானையிலிருந்து ஆரம்பமாகும். திருகோணமலைக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 15, 300 ரூபாவும் சீகிரியாவுக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 9000 ஆயிரம் ரூபாவும் அறிவிடப்படும்.
கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விமான சேவை அனுமதிப்பத்திர கருமபீடத்தில் தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சகல விமான சேவைகளுக்குமான அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, இவ்வாரம் யாழ். அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியிலும் விமான அனுமதிப்பத்திர கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.