இந்தியா வின் டெனிஸ் தாரகையான சானியா மிர்சா ஐ.டி.எப்,சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்; இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் ஜூலி காயினைத் தோட்கடித்தார்.
முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின்பு சானியா 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த சானியா 6-4 என சுலபமாக கைப்பற்றினார். இதையடுத்து சானியா 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.