சீகிரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூதனசாலை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கலாசார மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 480 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலையை இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதலாவது அரும்பொருட்காட்சியமாகக் குறிப்பிட முடியும். இன்று நடைபெறவுள்ள இந்த நூதனசாலைத் திறப்பு விழாவில் ஜப்பானின் பிரதிப் பிரதமர், அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.