ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தினாரா சபீனா இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை 6-7,6-1,7-5 என்ற செட்களில் இறுதிப் போட்டியில் போராடி வீழ்த்தி ஸ்லோவேனியா ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உலகத் தரவரிசையில் 38 ஆவது இடத்திலும் உள்ள சாரா எர்ரானி, முதல் செட்டில் டைபிரேக் வரை சென்று 7-6 என்று சபீனாவை வீழ்த்தினார்.
மூன்றாவது செட்டில் சாரா எர்ரானி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க 54 என்று முன்னிலை வகித்தார். ஆனால், அதற்கு அடுத்த தன் சர்வை சபீனாவிடம் இழக்க தோல்வியடைந்தார்.
சனா 172 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்