இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டெஸ்ட் போட்டியில் இலங்கை – அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் தொடரை கைவிட்ட நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
இரு அணிகளும் பலம் வாய்ந்த நிலையில் களத்தில் குதிப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.