யாழ்ப் பாணத்தில் அரிசி விலையை மேலும் குறைக்கும் நோக்கில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உற்பத்தியாகும் அரிசியைää வவுனியாவிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் அரிசி கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப் படுகின்றது.
இதனைத் தவிர்த்து வவுனியாவில் ஓர் இடத்திலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தால், யாழில் குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு வவுனியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு தடவை 10 லொறிகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியிடமும் விளக்கிக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.