இலத் திரனியல் ஊடாக காசுக்கட்டளைகளை அனுப்பும் புதிய நடவடிக்கையை தபால் திணைக்களம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையதளம் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் காசுக்கட்டளைகளை துரிதமாகவும் கிரமமமாகவும் அனுப்பி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய நடவடிக்கையின் மூலம் பணம் அனுப்பும் நபரின் தேவை 5முதல் 10 விநாடிகளில் நிறைவேறுகிறது. முதல் கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவருக்கு கூடியபட்சம் 25,000 ரூபாவை அனுப்பிவைக்க முடியும்.ஆரம்ப நடவடிக்கையாக 643 தபால் நிலையங்கள் ஊடாக இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.