யாழ்ப் பாணத்தில் அமுலில் இருந்து வரும் ஊரடங்குச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை இதுவரை அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் புதிய நடைமுறைக்கமைய நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவித்த பிரிகேடியர், கோவில் உற்சவம் முடியும் வரை இந்த நடை முறை அமுலில் இருக்கும் என்றார்.
இந்தப் பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு போதியளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஊரடங்கு அமுலில் இருக்கும் புதிய நேரத்திற்கு அமைய மக்களுக்குத் தேவையான போக்குவரத்து நேரங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்