பாகிஸ் தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றியீட்டியது.
தம்புள்ளையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. கடைசி வரிசையில் முதம்மத் 24 ஓட்டங்களையும், அஜ்மல் 16 ஓட்டங்களையும், பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி சற்றுக் கூடிய ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் 169 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக கபுகெதர ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர். கபுகெதரக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.