இத்தாலி யில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து நாட்களில் 29 உலக சாதனைகள் முறியடிக்கப்படடன. தொடர்ந்து உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் 5 ஆவது நாளான நேற்று மாத்திரம் 7 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை புதிதாக 29 உலக சாதனைகளின் நிலைநாட்டப் பட்டுள்ளன. போட்டிகளில் மேலும் 3 நாட்கள் எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீற்றர் மெட்லே போட்டியில் அமெரிக்காவின் ரயான் லொச்டே 1 நிமிடம் 54.10 வினாடிகளில் போட்டித் தூரத்தை நீந்தி முடித்து ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்பிஸின் உலக சாதனையை முறியடித்தார். பெல்ப்ஸ் இம்முறை தொடரில் பறிகொடுக்கும் இரண்டாவது உலக சாதனை இதுவாகும்.
இதனிடையே இம்முறை உலக சாதனைகள் முறியடிக்கும் வேகம் அதிகரிப்பதற்கு வீர, வீராங்கனைகள் உயரிய தொழிநுட்பத்திலான நீச்சல் உடைகளை பயன்படுத்துவதே காரணம் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நீச்சல் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இம்முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாதனைகள் முறியடிக்கப்படாமல் முடிவடைந்த போட்டிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும