இந்த வருடம் நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்கள் இயல்பு நிலையில் பரீட்சை எழுதுவதற்கு வசதியாக ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 22 தினங்கள் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் பாடசாலை பரீட்சார்த்திகளாக ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 755 பரீட்சார்த்திகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 43 ஆயிரத்து 336 பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 991 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
ஆயிரத்து 827 பரீட்சை நிலையங்களுக்கும் 267 விநியோக நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்படவுள்ளன. பரீட்சைக் கடமையில் 25,000 பேர் வரையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பரீட்சைகள் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 7 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.